Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரோகித்தை நோக்கி ஸ்டெய்ன் வசை - கடுப்பாகி பதிலடி!

ரோகித்தை நோக்கி ஸ்டெய்ன் வசை - கடுப்பாகி பதிலடி!
, திங்கள், 30 டிசம்பர் 2013 (14:04 IST)
டர்பன் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய டேல் ஸ்டெய்ன் இரண்டாவது இன்னிங்சில் இன்று காலை மோசடி தீர்ப்பில் கோலி விக்கெட்டையும் அபார பந்தில் புஜாராவையும் வீழ்த்தினார்.
FILE

இந்த நிலையில் ஒருநாள் போட்டிகள் முதல் ரோகித்தை தன் பவுலிங்கினால் பயமுறுத்திய ஸ்டெய்ன் இன்று சற்று அதிகமாகப் போய் வார்த்தை வசையில் இறங்கினார்.

நடந்தது என்ன?

முதலில் ஒரு பந்து இன்ஸ்விங்கர் ஆகிறது அதனை ரோகித் நன்றாகவே தடுத்தாடினார். அவர் அருகில் சென்று ஏதோ சிரித்தபடியே டேல் ச்டெய்ன் கேலி பேசினார்.
webdunia
FILE

அதற்கு அடுத்த பந்தை ரோகித் ஹூக் ஷாட் ஆடி பவுண்டரிக்கு விரட்டினார்.

மீண்டும் இன்னிங்ஸின் 45வது ஓவரை வீச டேல் ஸ்டெய்ன் வர இரண்டு பந்துகளை நன்றாக சாலிட் டிபன்ஸ் செய்தர் ரோகித். அவரை சற்றே நிலைகுலையச் செய்ய மீண்டும் ஸ்டெய்ன் ஏதோ கூற ரோகித் மீண்டும் ஏதோ கூறினார்.

ஆனால் ஸ்டெய்ன் கூறியது என்னவென்பது மைக்கில் கேட்டது: "உன் கிரிக்கெட் கரியரில் நீ ஒன்றுமே இன்னும் செய்துவிடவில்லை" என்றார் ஸ்டெய்ன்.

இதன் பிறகு அடுத்தடுத்து வாக்குவாததினால் நடுவர் இருவரையும் எச்சரிக்கவேண்டியதாயிற்று.

ஆஸ்ட்ரேலிய வீரர்களிடம் இந்த பாச்சா பலிக்காது. கிளார்க்கிடமோ, பாண்டிங்கிடமோ இப்படி ஏதாவது கேலி பேசினால், பதிலுக்கு 'எங்களுக்குத் தெரியும் நீ உன் பவுலிங் வேலையைப் பாரு' என்று உடனடியாக பதில் கொடுப்பார்கள்.

Share this Story:

வெப்துனியாவைப் படிக்கவும்

செய்திகள் ஜோ‌திட‌ம் சினிமா மரு‌த்துவ‌ம் மேலோங்கிய..

Follow Webdunia tamil