ரெய்னா நீக்கம் ஏன்? புள்ளிவிவரங்கள்!
, செவ்வாய், 11 பிப்ரவரி 2014 (16:07 IST)
2015
உலகக் கோப்பை கிரிக்கெட்டில் முதுகெலும்பாக நடுக்களத்தில் ரெய்னா இருப்பார் ஆகவேதான் அவரை 4ஆம் நிலையில் களமிறக்குகிறோம் என்று தோனி உட்பட அணி நிர்வாகிகள் கூறிவந்தனர்.
ஆனால் ஆசியக் கோப்பை கிரிக்கெட் அணியில் சுரேஷ் ரெய்னா இடம்பெறவில்லை என்பது அவர் தனது ஒருநாள் கிரிக்கெட் கரியருக்கு விடப்பட்ட சவாலாகும். ஒருமுறை ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டால் இன்றைய போட்டி உலகில் அதுவும் இந்திய அணியில் இடம்பெறுவது மிக மிக கடினம், ஆகவே ரெய்னாவின் ஒருநாள் கிரிக்கெட் வாழ்வு அஸ்தமித்து விட்டது என்றே கூறவேண்டும்.நீக்கத்திற்கு காரணமான சில விவரங்கள்:
2013
ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்தியாவில் அவர் 4 அரைசதங்களை அடித்தார். 50, 55, 89 நாட் அவுட், 83 நாட் அவுட். அதன் பிறகு அப்படியே ஆகஸ்ட் 1, 2013 -இல் ஜிம்பாப்வேயிற்கு எதிராக புலாவாயோவில் 65 அடிக்கிறார். இதே ஜிம்பாப்வே தொடரில் அவர் 0, 4, 28 நாட் அவுட் அவ்வளவுதான்.