யுவ்ராஜ் சிங்கின் டார்லிங்குகள்!
, வியாழன், 12 டிசம்பர் 2013 (14:26 IST)
அன்று, 2000ஆம் ஆண்டு நைரோபியில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்டில் ஆஸ்ட்ரேலியாவுக்குக் எதிரான முதல் போட்டியில் 82 ரன்களை அடித்ததோடு அபாரமான கேட்ச் ஒன்றையும் பிடித்து பந்து வீச்சிலும் அசத்தி உலகிற்கு தன்னை அறிவித்துக் கொண்டார் யுவ்ராஜ் சிங்.
அன்றிலிருந்து ஏகப்பட்ட ஏற்ற இறக்கங்களுடன் 2011 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் அசத்தி, நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று ரன்களை அடிக்க முடியாமலும் பீல்டிங்கில் எளிதான கேட்ச்களைக் கோட்டைவிட்டும் அணிக்கு ஒரு சுமையாக திகழ்கிறார். யுவ்ராஜ் ஏன்? இவர் ஒரு பார்ட்டி நபராக, கிரிக்கெட் அல்லாத மகிழ்ச்சிகளில் திளைக்கத் தொடங்கிவிட்டார் யுவ்ராஜ்.ஏகப்பட்ட செலிபிரிட்டி பெண்களுடன் அவர் இணைத்துப் பேசப்பட்டார். சில தொலைக்காட்சி நேர்காணல்களில் ரசிகர்கள் அவரிடம் நேரடியாக இதைப்பற்றி கேட்டுள்ளனர். அவரும் ஒப்புக் கொண்டுள்ளார்.அப்படி யுவ்ராஜ் சிங்கை கவர்ந்த அவரது 'டார்லிங்குகள்' யார் யார்? இதோ சில பெண்களின் படங்கள்: