Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சச்சின் டெண்டுல்கர் சில சுவையான தகவல்கள்!

Advertiesment
சச்சின் டெண்டுல்கர் சில சுவையான தகவல்கள்!
, ஞாயிறு, 23 டிசம்பர் 2012 (16:07 IST)
FILE
இந்தியாவில் முதன் முதலாக 1987ஆம் ஆண்டு உலகக் கோப்பை நடைபெற்றபோது மைதானத்தில் பந்துகளை ஃபீல்ட் செய்து எடுத்துக் கொடுக்கும் 'பால் பாய்'-ஆக சச்சின் இருந்திருக்கிறார்!

சச்சின் டெண்டுல்கர் தனது உயரத்தை வைத்துக் கொண்டு வேகப்பந்து வீச்சாளராக வேண்டும் என்ரு எம்.ஆர்.எஃப் வேகப்பந்து அகாடமிக்கு வந்து டெனிஸ் லில்லியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறார்.

1988ஆம் ஆண்டு வினோத் காம்ப்ளியுடன் இணைந்து பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில் 326 ரன்கள் எடுத்துள்ளார் சச்சின்.

19 வயதில் இங்கிலிஷ் கவுண்டி கிரிக்கெட் ஆடிய முதல் வீரர், மேலும் 1992ஆம் ஆண்டு யார்க் ஷயர் அணி ஒப்பந்தம் செய்த முதல் அயல்நாட்டு வீரரும் சச்சின் டெண்டுல்கரே.

உள்நாட்டு கிரிக்கெட்டின் அனைத்து வடிவங்களிலும் முதல் போட்டியிலேயே சதம்; ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை,இரானி கோப்பை.

இவருக்கு பிடித்தமான ஸ்போர்ட்ஸ் வீரர் யார் தெரியுமா? நிச்சயம் கிரிக்கெட் வீரர் இல்லை டென்னிஸ் வீரர் ஜான் மெக்கன்ரோ.

கராச்சியில் 1989ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடும்போது கவாஸ்கர் கொடுத்த பேடுகளை கட்டிக் கொண்டு களமிறங்கினார் சச்சின்!

வாழ்நாள் முழுதும், டென்னிஸ் எல்போ என்ற காயம் ஏற்பட்டும் சுமார் ஒன்றரை கிலோ எடையுள்ள ஹெவி வெயிட் பேட்டை பயன்படுத்தி வந்தார்.

20 வயதுக்கு முன்னாலேயே 5 டெஸ்ட் சதங்களை அடித்து பெருமை பெற்றார்.

1998ஆம் ஆண்டு இவரது சிறந்த ஒருநாள் கிரிக்கெட் ஆண்டாகும், 9 சதங்களை அந்த ஆண்டு மட்டும் எடுத்துள்ளார்.

கடைசியாக இவருக்கு கிடைத்த மகுடம் ராஜ்ய சபா எம்.பி. பதவி.

அயல் நாட்டின் உயரிய விருதைப் பெறும் முதல் விளையாட்டு வீரரும் இவரே. ஆஸ்ட்ரேலியாவின் உயரிய அரசு விருதை பெற்றார் சச்சின் டெண்டுல்கர்.

Share this Story:

Follow Webdunia tamil