சங்கக்காரா மீண்டும் சதம்! சாதனைக்கு மேல் சாதனை! சுவையான புள்ளிவிவரங்கள்!
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (17:30 IST)
சிட்டகாங்கில் வங்கதேசத்திற்கு எதிராக நடைபெறும் 2வது டெஸ்ட் போட்டியின் 4ஆம் நாளான இன்று சங்கக்காரா தனது 319 ரன்கள் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை அடுத்து 2வது இன்னிங்ஸிலும் 105 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.
இலங்கை இரண்டாவது இன்னிங்சில் 305/4 டிக்ளேர் செய்தது. வங்கதேசத்திற்கு வெற்றி இலக்கு 467 ரன்கள் என்ற நிலையில் அந்த அணி இன்றைய ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 12 ரன்கள் எடுத்துள்ளது. வங்கதேசம் முதல் இன்னிங்சில் 426 ஆல் அவுட். மெண்டிஸ் 6 விக்கெட்டுகளை சாய்த்தார்.சங்கக்காரா சாதனை:
சங்கக்காரா இதே டெஸ்ட் போட்டியில் 35வது டெஸ்ட் சத்தை எடுத்தார். ஒரே டெஸ்ட் போட்டியில் ஒரு வீரர் 424 ரன்களை விளாசியிருப்பது 3வது டெஸ்ட் சாதனையாகும்.