இங்கிலாந்தின் மேட்ச் வின்னர் கெவின் பீட்டர்சனே! சில புள்ளி விவரங்கள்!
, வெள்ளி, 7 பிப்ரவரி 2014 (18:11 IST)
தன் சொந்த நாடான தென் ஆப்பிரிக்காவை விடுத்து இங்கிலாந்துக்கு ஆட வந்த பீட்டர்சனை ஒரு விருந்தாளியாக கருதாமல் மிகவும் மோசமாக மனம் நோகச்செய்து வெளியேற்றியது இங்கிலாந்து. ஆனால் அவர்தான் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்துக்காக அதிக ரன்கள் எடுத்த வீரர் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
ஒருநாள், டெஸ்ட், T20 என்று அனைத்து வடிவங்களிலும் அவர் 13,779 ரன்கள் எடுத்துள்ளார். இதுதான் ஒரு இங்கிலாந்து வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். கிரகாம் கூச் இவரை விட 589 ரன்கள் குறைவு. ஆனால் அவர் 20 ஆண்டுகள் ஆடினார். கெவின் பீட்டர்சனோ 10 ஆண்டுகளே விளையாடி இதனை சாதித்துள்ளார். இதனால்தான் இவரது தாக்கம் இங்கிலாந்தில் அதிகம்.கடந்த 30 ஆண்டுகளில் இங்கிலாந்து உருவாக்க முடியாத ஒரு வீரர் கெவின் பீட்டர்சன். அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்துக்கு சிறந்த பேட்ஸ்மெனாக இருந்துள்ளார் கெவின் பீட்டர்சன்.டெஸ்ட் சராசரி 47.28 தான். ஆனால் அவரது திறமைக்கு இது மிகவும் குறைவு. நிச்சயம் சச்சின், பாண்டிங், திராவிட் ஆகியோருடன் வைத்து பேசப்படவேண்டிய வீரர்தான் கெவின் பீட்டர்சன்.
2011
ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு 4 டெஸ்ட் போட்டிகள் இடைவெளியிலும் சதம் என்று அவர் ஸ்கோர் செய்து கொண்டிருந்தார். இது அபாரமான ஒரு விஷயமாகும்.