Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆஞ்சேலோ மேத்யூஸ் திருமணம்: ராஜபக்ச சாட்சிக் கையெழுத்து!

ஆஞ்சேலோ மேத்யூஸ் திருமணம்: ராஜபக்ச சாட்சிக் கையெழுத்து!
, திங்கள், 22 ஜூலை 2013 (13:01 IST)
FILE
இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் ஆஞ்செலோ மேத்யூஸ், ஹெஷானி சில்வாவை கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் செய்துக்கொண்டார்.

பம்பாலாபிட்டியாவில் உள்ள புனித மேரி தேவாலயத்தில் தனது பள்ளி கால தோழியான ஹெஷானி சில்வாவுக்கு மோதிரம் அணிவித்து ஆஞ்செலோ மேத்யூஸ் திருமணம் செய்து கொண்டார்.

ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பங்கேற்ற இந்த திருமணத்திற்கு சாட்சிகளாக இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, பாதுகாப்பு துறை மந்திரி கோத்தபய ராஜபக்சே ஆகியோர் கையொப்பமிட்டனர்.

திருமணத்திற்கு பின்னர், தலைநகர் கொழும்புவில் உள்ள சின்னமன் கிராண்ட் ஓட்டலில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள் தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Share this Story:

Follow Webdunia tamil