Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அஷ்வினின் 6வது 5 விக்கெட்; சுவையான தகவல்கள்!

அஷ்வினின் 6வது 5 விக்கெட்; சுவையான தகவல்கள்!
, வெள்ளி, 22 பிப்ரவரி 2013 (19:16 IST)
FILE
மைக்கேல் கிளார்க் இன்று அடித்த சதம் இந்தியாவுக்கு எதிராக அவர் எடுக்கும் 6-வது சதம் ஆகும். ரிக்கி பாண்டிங்கும் இந்தியாவுக்கு எதிராக 8 சதங்களை எடுத்து முதலிடத்தில் உள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில் 2011-இல் தொடரில் பங்கேற்றது முதல் கிளார்க் 18 டெஸ்ட் போட்டிகளில் 2,136 ரன்களை 82.15 என்ற சராசரியுடன் எடுத்துள்ளார். இதில் 8 சதங்கள் உள்ளடங்கும்.

டெஸ்ட் கேப்டன் என்ற அளவில் மைக்கேல் கிளார்க் 20 போட்டிகளில் 72.57 என்ற சராசரி வைத்துள்ளார். டான் பிராட்மேன் கேப்டனாக 37 இன்னிங்ஸ்களில் 101.51 என்ற சராசரி வைத்திருந்தார். கிளார்க் 9 சதங்களையும் 5 அரைசதங்களையும் கேப்டனகா பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக கடைசி 4 டெஸ்ட்களில் கிளார்க் எடுக்கும் 3வது சதமாகும் இது.

முதல் நாளில் அஷ்வின் முதல் 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஆஸ்ட்ரேலியாவுக்கு எதிராக முதல் 5 விக்கெட்டுகள், மொத்தமாக 6 முறை 5 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார் அஷ்வின் அனைத்தும் இந்தியாவில்.

1970ஆம் ஆண்டிற்குப் பிறகு முதல் இன்னிங்ஸில் ஸ்பின்னர்கள் அதிக முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்தும் வகையில் சென்னை முதலிடம் பிடித்துள்ளது. இலங்கையில் உள்ள கால்லே அடுத்ததாக 2ஆம் இடத்தில் உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்ட்ரேலியாவின் 6வது விக்கெட் ஜோடிகளான ஹென்ட்ரிக்ஸ், கிளார்க் இன்று சேர்த்த 151 ரன்கள் 3வது மிகப்பெரிய பார்ட்னர்ஷிப் ஆகும். இதற்கு முன்னர் 2001 ஆம் ஆண்டு மும்பையில் ஆடம் கில்கிறிஸ்ட், மேத்யூ ஹெய்டன் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 197 ரன்களை சேர்த்ததே அதிகம்.

ஹென்ட்ரிக்ஸ் எடுத்த 68 ரன்கள் முதல் டெஸ்டில் 7ஆம் நிலையில் களமிறங்கிய பேட்ஸ்மென் எடுக்கும் அதிகபட்ச ரன்களாகும். இது 6வ்பது அதிகபட்ச ரன்களாகும். இங்கிலாந்துக்கு எதிராக இதே டவுனில் 1970ஆம் ஆண்டு கிரெக் சாப்பல் பெர்த்தில் எடுத்த 108 ரன்களே இந்த டவுனில் ஆஸ்ட்ரேலிய அதிகமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil