தேவையானவை
உளுத்தம் பருப்பு-1 கப்
பொடியாக நறுக்கிய கோஸ்-1 கப்
இஞ்சி-1 துண்டு
பச்சை மிளகாய்-2
கறிவேப்பிலை-சிறிது
உப்பு-ருசிக்கேற்ப
எண்ணெய்-தேவையான அளவு.
செய்முறை:
உளுத்தம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வையுங்கள்.
பின்னர் நன்கு மெத்தென்று அரைத்து, அதில் மிகவும் பொடியாக நறுக்கிய கோஸ், இஞ்சி, மிளகாய், சீரகம், பெருங்காயம், உப்பு சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளுங்கள்.
சற்று மெல்லிய வடைகளாக தட்டி காயும் எண்ணெயில் பொரித்தெடுங்கள்.
வெங்காயத்திற்கு பதிலாக கோஸ் சேர்த்து செய்யும் வடை சுவையிலும் அருமையாக இருக்கும்.