அப்பம் என்றாலே குழந்தைகளும் காலை உணவை தவிர்ப்பவர்களும் கூட அதை ஒரு கை பார்த்த பின் தான் அன்றைய தினத்தை துவங்குவார்கள்.
தேவையான பொருட்கள்:
புழுங்கல் அரிசி 1 பாகம் 2 கப்
கடலை பருப்பு + உளுந்தம் பருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் + பெருங்காயம் + கறிவேப்பிலை + தேங்காய்துருவல் + உப்பு
செய்முறை:
ஊற வைத்து அரைத்த அரிசி, பருப்புடன், மிளகாய், பெருங்காயம் உப்பு சேர்த்து அரைக்கவும்.
கறிவேப்பிலையை கிள்ளி போட்டு, தேங்காய் துருவல் சேர்த்து, வடை போல் தட்டவும். பூரி போல் உப்பி வருவதால் எழும்பல் அப்பம் என்று பெயர். மறுநாளும் வைத்து சாப்பிடலாம்.