அகிம்சை வழியில் சுதந்திரப் போராட்டத்தில், நாட்டு மக்களை ஒருங்கிணைத்த அந்த மகாத்மா, மனித வாழ்க்கையை வழிநடத்தும் முறைகளையும் தனது வார்த்தைகளால் உதிர்த்து விட்டுச் சென்றுள்ளார். அவர் உதிர்த்தவை பல இருக்கலாம். அவற்றில் 'உங்களைக் கவர்ந்த பொன்மொழி என்ன?' என்று சமகால அரசியல் தலைவர்களை கேட்க ஆசை. ஆனால், அனைவரையும் தொடர்பு கொண்டு கேட்பதற்கு போதிய கால அவகாசம் நமக்கு இல்லை. எனவே, அந்த அரசியல் தலைவர்களைக் கவர்ந்த காந்தியின் பொன்மொழி இதுவாகத் தான் இருக்கும் என்ற நம்பிக்கையிலும் எண்ணத்திலும் விரிகிறது நமது கற்பனை... பிரதமர் மன்மோகன் சிங்
"முதலில் உங்களை அவர்கள் உதாசினப்படுத்துவர், பிறகு உங்களைக் கண்டு அவர்கள் எள்ளி நகையாடுவர், பிறகு உங்களுக்கு எதிராக சண்டையிடுவர், பிறகு நீங்கள் வெற்றி பெறுவீர்௦௦."
சோனியா காந்தி
"குணநலனும் புனிதத்தன்மையுமே பெண்ணின் உண்மையான ஆபரணம்.”
எல்.கே.அத்வானி
"எனது வாழ்க்கையே எனது செய்தி."
காரத், பரதன், ராஜா முதலிய இடதுசாரி தலைவர்கள்
"நேர்மையான ஒத்துழையாமையே அவ்வப்போது முன்னேற்றத்தின் நல்ல அறிகுறியாகிறது."
லாலு பிரசாத் யாதவ்
"
என்னிடம் மட்டும் நகைச்சுவை உணர்வு இல்லாமல் போயிருந்தால், நான் எப்போதோ தற்கொலை செய்து கொண்டிருப்பேன்,"மாயாவதி"
கோபமும் சகிப்புத்தன்மையின்மையுமே துல்லியமான புரிதலுக்கு எதிரி."அமர்சிங் "
சாதுவான வழியில், உன்னால் உலகத்தையே அசைக்க முடியும்."ராஜ் தாக்கரே "
அரசியலில் மதம் ஒன்றும் செய்யப்போவதில்லை என்பவர்களுக்கு, மதம் என்றால் என்ன என்பது தெரியாது."கருணாநிதி"
என் அனுமதியின்றி, என்னை எவரும் காயப்படுத்த முடியாது."ஜெயலலிதா
"எவ்வாறு சிந்திப்பது என்பதை அறிந்தவர்களுக்கு ஆசான்கள் தேவையில்லை."
ராமதாஸ்
"ஒத்துழைப்பு என்பது ஒரு கடமை என்றால், குறிப்பிட்ட விதிகளுக்குக் கீழே ஒத்துழையாமையும் கூட கடைப்பிடிப்பேன்."