Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் ரூ.300 டி‌க்கெ‌ட்டி‌ற்கு வரவே‌ற்பு

‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் ரூ.300 டி‌க்கெ‌ட்டி‌ற்கு வரவே‌ற்பு
, திங்கள், 26 ஏப்ரல் 2010 (12:15 IST)
திருப்பதி ஏழுமலையா‌ன் கோ‌யி‌லி‌ல் த‌ற்போது நடைமுறை‌யி‌ல் உ‌ள்ள ரூ..300 விரைவு டிக்கெட் கட்டண தரிசனம் பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று திருப்பதி தேவஸ்தான அதிகாரி கிருஷ்ணராவ் கூறினார்.

திருப்பதி தேவஸ்தான செயல் அலுவலர் கிருஷ்ணாராவ் சென்னையில் நேற்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சினா‌ர். அ‌ப்போது, ஆ‌ந்திர மாநிலத்தில் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் மலைவாழ் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் வெங்கடாசலபதியை தரிசனம் செய்யும் வகையில் லோககல்யாண்ரதம் கொண்டு செல்லப்பட்டது. இது ஒரு நடமாடும் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் ரதம் ஆகும். இந்த ரதம் மாவட்டத்தின் முக்கிய இடங்களில் 7 நாட்கள் வரை நிறுத்தப்பட்டு வருகிறது. இந்த ரதத்தில் இருந்த வெங்கடாசலபதியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

இதற்கு பக்தர்களிடம் நல்ல வரவேற்பு இருப்பதால் தமிழ்நாட்டிலும் இந்த லோக் கல்யாண் ரதத்தை கொண்டு செல்வது குறித்து ஆலோ‌சி‌த்து வருகிறோம். இலவச தரிசனம் செய்பவர்கள் நீண்டநேரம் வரிசையில் நிற்பதை தவிர்ப்பதற்காக அக்சஸ் கார்டு என்ற ஒரு முறை 3 மாதங்களுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முறை மூலம் தரிசனம் செய்வதற்கான நேரத்தை குறித்து கொண்டு அந்த குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து சாமி சரிசனம் செய்யலாம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது.

எளிதாக சாமி தரிசனத்துக்காக ரூ.300 டிக்கெட் கட்டணம் செலுத்தி விரைவு தரிசனம் என்ற முறை கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்கு எந்த விதமான சிபாரிசும் தேவை இல்லை என்பதால் ஏழை முதல் பணக்காரர்கள் வரை மிகவும் எளிதாக சாமி தரிசனம் செய்ய மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டுகிறார்கள்.

ரூ.300 டிக்கெட்டுக்கு இலவசமாக 2 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. கூடுதலாக ரூ.100 வழங்குபவர்களுக்கு 4 லட்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் லட்டுகள் வாங்குவதில் உள்ள முறைகேடுகள் குறைக்கப்பட்டுள்ளது எ‌ன்று அவ‌ர் கூ‌றினா‌ர்.

Share this Story:

Follow Webdunia tamil