பொதுவாக பருவ காலங்கள் நான்கு வகையாக பிரிக்கபட்டு உள்ளது. ஆனால் வாளைகுடாவில் இரண்டு காலங்கள் மட்டுமே. கோடை காலம் என்பது 10 மாதங்கள்.. மற்ற 2 மாதங்கள் மிதமான குளிர் காலம்.
வறுத்து எடுக்கும் கோடை நாட்கள் பற்றி எழுதவே வேண்டாம்... வளைகுடா மக்கள் குளிர்சாதன பெட்டி இன்றி ஒரு நொடி கூட இருக்க மாட்டார்கள்.
கண்களை மூடிக்கொளுங்கள்....இப்போது தகிக்கும் வெயிலின் பாலைவனதின் நடுவே அழகான பசுமையான மலை தொடர்கள், இதமான குளிர் காற்று, இயற்கையின் எல்லா அழகுகளும் இருக்கும் ஒரு சோலையில் இருப்பதை போல் கற்பனை செய்து கொள்ளுங்கள்….ஆம் , நீங்கள் இப்போது கற்பனை செய்த இடம் போல்... வளைகுடாவில் ஒரு இடம் இருக்கிறது ...பூலோக சொர்க்கபூமி....... ஒரு சிறிய ஸ்விட்ஸர்லாந்து (Switzerland)...... சுல் தான் ஆஃப் ஓமனின் (Sultanate of Oman) ஒரு பகுதியான தோஃபார் (Dhofar) எனப்படும் பகுதியின் தலைமை இடம் சலாலா (Salalah) என்னும் இடம் தான் அது. வளைகுடாவில் ஒரு பாலைவனசோலைஇந்த தலைப்பு ஒரு திரைபடத்தின் தலைப்பு போல் தெரிந்தாலும் இந்த நாட்டை பொருத்தவரை நூறு விழுக்காடு உண்மை.
கேரளாவில் தென் மேற்கு பருவ மழை தொடங்கும் போது அதன் தாக்கம் இங்கு தெரிகிறது . ஜூன் முதல் செப்டம்பர் இறுதி வரை அருமையான தென்றல் காற்று, பனி பொழியும் மலை மேல் தவழ்ந்து வரும் மேகங்கள், சாரல் மழை , எங்கு பார்த்தாலும் பச்சை கம்பளம் விரித்தது போல் பசுமை, புல் வெளிகள், சலசலக்கும் நீரோடை, ஆர்ப்பறித்து கொட்டும் நீர் அருவி, கூட்டமாக பறந்து வரும் பறவை கூட்டங்கள் என்று இந்த அழகை காண்பதற்க்கு இரண்டு கண்கள் போதாது. இதை தவிர இந்த மாதங்களில் இங்கு நடக்கும் கண்காட்சிகள் ஒரு திருவிழா போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். இது மட்டும் அல்லது மாநகராட்சி ஏற்பாடு செய்யும் பல கலை நிகழ்சிகள் கண்களுக்கு விருந்தாகும்.1080
கி.மீ. தொலைவில் உள்ள மஸ்கட்டில் (Muscat) 50 டிகிரி வெயில்.. ஓமான் அருகே இருக்கும் எல்லா வளைகுடா நாடுகளும் வெயிலின் தாக்கதில் இருக்கும் போது இங்கு மட்டும் கடவுளின் கருணை என்ன வென்று சொல்வது...பலைவனநாடுகளில் மழை என்பது ஒரு அரிதான நிகழ்வு. வருடத்தில் 2 நாட்கள் மழை பெய்தால் அதிகம். ஆனால் சாரல் மழை மிதமாக ,சுகமாக தினமும் இந்த காலங்களில் இங்கு பெய்யும். இதுவே மற்ற வளைகுடா பகுதிகளுக்கும் இந்த பகுதிக்கும் உள்ள மிக பெரிய வித்தியாசம். மழை இருந்தால் மற்ற வளங்களுக்கு குறை ஏது? தற்போது இங்கு ஆட்சி செய்யும் சுல்தான் க்யாபூவூஸ் ஆஃப் ஓமன் (Sultan Qaboos of Oman) பிறந்த இடம் சலாலா. ஒரு சிறிய நாகரீகம் வளர்ந்த கிராமம் சலாலா அவ்வளவுதான். ஜூன் முதல் வாரம் முதல் செப் டம்பர் வரை உள்ள பருவ நிலை காலத்தை “கரீப்”’ ( khareef) என்று கூறுகிறார்கள். அண்டை நாடுகளான குவைத், பஹ்ரைன், சௌதி, துபாய், அபுதாபி, இந்தியா மற்றும் அமெரிக்கா, யுரோப் போன்ற மற்ற நாடுகளில் இருந்தும் குடும்பம் குடும்பமாக இங்கு வந்து இந்த வஸந்த காலத்தை அனுபவிக்கிறார்கள். வெட்ட வெளியில் குடில் அமைத்து அமைதியா ரசித்து விட்டு நிறைவான மனத்தோடு திரும்பி செல்கிறார்கள். ஒவ்வொரு ஆண்டும் இங்கு வந்து குவியும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டங்கள் அதிகரிக்கவே செய்கிறது.
பார்க்கவும் நிறைய இடங்கள் இருக்கின்றது. முகசைல் பீச்( Mughasyl Beach), இங்கு ப்லோ ஹோல்ஸ் (blow holes) எனப்படும் குழிகளில் இருந்து 30 அடிக்கும் மேலாக கடல் நீர், நீரூற்று போல் பொங்கி வரும் அழகான காட்சியைக் காணலாம். மேலும் இங்கு புவியீர்ப்பு விசையும் குறைவு. அதாவது ஸீரொ க்ரேவிடி பாய்ண்ட் (zero gravity point). இங்கு வண்டிகள் இயக்காமல் நிறுத்திவிட்டாலும் தானாகவே நகரும் தன்மை கொண்டது. 100
அடியில் இருந்து விழும் அழகு நீர் வீழ்ச்சி...அதைச் சுற்றிலும் பசுமையான மலை. இதை தவிர பல இயற்கை குகைகளும் பயணிகளை வெகுவாக ஈர்க்கின்றன.“சலாலா” (Salalah) தான் உலகின் முதல் தர சாம்பிராணியின் பிறப்பிடம்.தாவி அட்திர் (Tawi attair) என்னும் இடத்தில் இயற்கையான புதைகுழிகள் ஏராளமாக உள்ளன. அதில் சுமார் 100 மீட்டர் அகலமும், 211 மீட்டர் ஆழமும் கொண்ட புதைகுழிகளும் உள்ளன. உலகிலேயே மிகப்பெரிய புதைகுழிகள் இங்குதான் இருக்கின்றன என்று கூறச் சொல்லலாம். 3
பெரிய சாலைகளிலேய “சலாலா” (Salalah) அடங்கிவிடும். ஆனால் உலகின் இயற்கை மொத்தமும் இங்கு நிறைந்திருக்கிறது என்பதுதான் இதன் சிறப்பு. வளைகுடா நாடுகளில் அதிகமாக காணப்படும் பேரீச்சம் பழ மரங்கள் ஒன்றை கூட சலாலாவில் காணவில்லை... வேறு என்ன மரங்கள் தான் இருக்கின்றன என்று கேட்பவர்களுக்கு அதிசயமான செய்தி என்னவென்றால், எங்கு நோக்கினும் வாழை தோப்புகள், தென்னந்தோப்புகள் மட்டுமே பசுமையாக காட்சியளிக்கின்றன.
சலசலக்கும் நீர் ஓடைகள், எங்கு பார்த்தாலும் பசுமை மலைகள், தோப்புகள், அழகிய இயற்கை குகைகள், அழகிய கடல் மற்றும் நீண்ட கடற்கரை, அமைதியான வாழ்க்கை முறைகள்....மனிதநேய மனிதர்கள் ...வாழ்க்கையில் வேறு என்ன வேண்டும்...?இங்கு ஒரு சிறிய சர்வதேச விமான நிலையமும் இருக்கிறது. விசா முறைகள் கடுமையாகப் பின்பற்றப்படும். ஆனால் அதிகமாக கெடு பிடி இல்லை...இங்கு வஸந்த காலத்தில் மட்டும் தான் சுற்றுலா சூடு பிடிக்கும். மற்ற நாட்களில் இங்கு பெரிதாக மக்கள் வர மாட்டார்கள். இப்பகுதியில் வாழும் மக்கள் சுற்றுலாவை மட்டும் நம்பி வாழவில்லை, விவசாயம், ஆடு, மாடுகள் வளர்ப்பு , சாம்பிராணி பாதப்படுத்துதல் ஆகியவை இங்கு தொழிலாக இருக்கிறது. இங்கு உள்ள ஆடுகள் வித்தியாசமான காதுகள் கொண்டு இருக்கும் .
ஒரே வெயில், புழுக்கம், எங்கு பார்த்தாலும் காய்ந்து போன மலை என்ற நிலைமையிலிருந்து சற்று மாற்றம் வேண்டும் என்பவர்கள் ஒரு முறை சலாலாவுக்கு வாருங்கள்.நாங்கள் தற்போது தான் இந்த அழகிய ஊருக்கு வாழ வந்து இருக்கிறோம்வாழ்க்கை வாழ்வதற்கே.... அதை வீணாகமல் இயற்கை அழகு கொட்டி கிடக்கும் இப்படிப்பட்ட இடங்களுக்கு சென்று மகிழலாமே!நன்றி - திருமதி : ஹேமா ராமன்சலாலா (Salalah)