சுற்றுலாப் பயணிகளுக்காக சமீபத்தில் திறந்துவிடப்பட்ட முதுமலை புலிகள் காப்பகம் நாளை முதல் தற்காலிகமாக மூடப்படுகிறது.
முதுமலை புலிகள் காப்பகத்தில் வரும் 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறவுள்ள ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி காரணமாக, முதுமலை புலிகள் காப்பகம் வெள்ளிக்கிழமை (மே 14) முதல் 17-ம் தேதி வரை மூடப்படுகிறது.
முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் ராஜீவ் ஸ்ரீவத்சவா கூறுகையில், முதுமலை புலிகள் காப்பகத்தில் நடைபெறஉள்ள ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணியின்போது, வன உயிரினங்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் இச்சரணாலயம், 14-ம் தேதி பிற்பகல் முதல் 17-ம் தேதி பிற்பகல் வரை மூடப்பட உள்ளது.
இந்த 3 நாட்களும் முதுமலை புலிகள் காப்பகத்தைப் பார்ப்பதற்கு சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இதற்கு பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென ராஜீவ் ஸ்ரீவத்சவா தெரிவித்தார்.