Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டிச‌. 15 முத‌ல் ‌தீவுத்திடலில் பொருட்காட்சி துவ‌க்க‌ம்

டிச‌. 15 முத‌ல் ‌தீவுத்திடலில் பொருட்காட்சி துவ‌க்க‌ம்
, செவ்வாய், 17 நவம்பர் 2009 (15:36 IST)
சென்னை தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி டி‌ச‌ம்ப‌ர் 15ஆ‌ம் தே‌தி முத‌ல் துவ‌ங்கு‌கிறது. 80 ந‌ா‌ட்க‌ள் நடைபெறு‌ம் இ‌ந்த பொரு‌ட்கா‌ட்‌சி‌யி‌ல் ப‌ல்வேறு அர‌ங்குக‌ள் அமை‌க்க‌ப்ப‌ட உ‌ள்ளன.

சென்னை ‌தீவுத்திடலில் அரசு சுற்றுலா பொருட்காட்சி ஆண்டுதோறும் தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பில் நடத்தப்ப‌ட்டு வரு‌‌கிறது.

webdunia photo
WD
செ‌ன்னை ம‌க்க‌ள் ம‌ட்டும‌ல்லாம‌ல், த‌மிழக ம‌க்களு‌ம் ‌அ‌திகள‌வி‌ல் வ‌ந்து செ‌ல்லு‌ம் ஒரு சு‌ற்றுலா‌த் தலமாக ‌தீவு‌‌த்‌திட‌லி‌ல் அமை‌க்க‌ப்படு‌ம் பொரு‌ட்கா‌ட்‌சி உ‌ள்ளது. பொதுவாக ஆ‌ங்‌கில‌ப் பு‌த்தா‌ண்டான ஜனவ‌ரி 1ஆ‌ம் தே‌தி துவ‌ங்‌கி த‌மி‌ழ் பு‌த்தா‌ண்டான ஏ‌ப்ர‌ல் 14ஆ‌ம் தே‌தி முடிவடையு‌ம்.

ஆனா‌ல் கட‌ந்த ஒரு ‌சில ஆ‌ண்டுகளாக ‌கி‌றி‌ஸ்தும‌ஸ் ப‌ண்டிகை‌க்கு மு‌ன்பாக பொரு‌ட்கா‌ட்‌சியை‌த் துவ‌க்குவதா‌ல் ஏராளமானோ‌ர் ‌தீவு‌த்‌திடலு‌க்கு வருவா‌ர்க‌ள் எ‌ன்ற நோ‌க்க‌த்‌தி‌ல் சு‌ற்றுலா‌த் துறை தி‌ட்ட‌மி‌ட்டு மு‌ன்கூ‌ட்டியே ‌திற‌க்க‌ப்படு‌கிறது. அத‌ன்படி இ‌ந்த ஆ‌ண்டு‌ம் டிச‌ம்ப‌ர் 15ஆ‌ம் தே‌தி துவ‌க்க முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

டிசம்பர் 15ஆ‌ம் தேதி துவ‌ங்கு‌ம் பொரு‌ட்கா‌ட்‌சி தொட‌ர்‌ந்து 80 நாட்கள் நடைபெற உ‌ள்ளது. இ‌ந்த பொருட்காட்சிக்கான அரங்குகள் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள சிற்பங்கள், கோ‌யில்கள் உள்ளிட்ட சுற்றுலா சிறப்பு இடங்களை பொருட்காட்சி வளாகத்தில், அங்கு பார்ப்பது போன்ற தோற்றத்தில் வடிவமைக்கவு‌ம் ‌தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

இ‌ந்த ஆ‌ண்டு அமை‌க்க‌ப்பட உ‌ள்ள பொரு‌ட்கா‌ட்‌சி‌யி‌ல், அரசுத்துறை அரங்குகள், மத்திய அரசு நிறுவனங்களின் அரங்குகள், 120 கடைகள் அமைக்கப்படுகின்றன 80 நாட்களும் கலை நிகழ்ச்சிகள், நாட்டியம், பட்டிமன்றம், இன்னிசை பாடல்கள், நாடகம் போன்ற ‌சிற‌ப்பு ‌நிக‌ழ்‌ச்‌சிகளு‌ம் இடம்பெற ‌உ‌ள்ளது.

தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோ‌யில் போன்று பொருட்காட்சியில் அண்ணா கலையரங்கம் நிறுவப்படுகிறது. கட‌ந்த ஆ‌ண்டு அம‌ர்நா‌த் ப‌னி‌லி‌ங்க‌‌க் கோ‌யி‌ல் உருவா‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்தது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

பெ‌ரியோ‌ர்களு‌க்கு ம‌ட்டும‌ல்லாம‌ல், ‌சிறுவ‌ர்களு‌க்கு‌ம் ‌பிடி‌க்கு‌‌ம் வகை‌யி‌ல், பொழுதுபோக்கு அம்சங்கள், ராட்சத விளையாட்டு சாதனங்கள் இடம் பெறுகின்றன. சிறுவர் இரயில், அறிவியல் நகரம் போன்றவை உருவாக்கப்படுகிறது.

த‌ற்போது நுழைவுக் கட்டணமாக சிறியவர்களுக்கு ரூ.7‌ம், பெரியவர்களுக்கு ரூ.10‌ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ப‌ல்வேறு ப‌‌ள்‌ளிக‌ளி‌ல் ப‌யிலு‌ம் மாணவ‌ர்க‌ளு‌க்கு ‌சிற‌ப்பு டி‌க்கெ‌ட்டுகளை சு‌ற்றுலா‌த் துறை ஒ‌வ்வொரு ஆ‌ண்டு‌ம் வழ‌ங்‌கி வரு‌வது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

Share this Story:

Follow Webdunia tamil