சுதந்திர தினத்திற்காக கடந்த சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை வந்ததால் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிந்தனர்.
குற்றாலத்தில் கடந்த மாதம் துவங்கிய சீசன் தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது. இதனால் கடந்த ஞாயிறுகளில் அதிகமான கூட்டம் அலைமோதியது.
குற்றாலத்தில் நேற்று சாரல் இல்லை. லேசான வெயில் காணப்பட்டது. ஆகஸ்ட் மாத சீசன் முடிவதற்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், விடுமுறை தினமான நேற்று குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிமாக காணப்பட்டது.
மெயினருவி, ஐந்தருவி, புலியருவி, பழைய குற்றால அருவி ஆகியவற்றில் தண்ணீர் குறைவாக விழுந்ததால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் வரிசையில் நின்று குளித்தனர்.