புதுடெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள மொகாலய தோட்ட பூங்காவை பொதுமக்கள் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மொகாலய அரசர்களின் காலத்தில் அமைக்கப்பட்ட இந்த தோட்டத்தில், டிசம்பர் மாதத்தில் இருந்து பூக்கள் பூத்துக் குலங்கும். அந்த சமயத்தில் பொதுமக்களின் பார்வைக்காக இந்த பூங்கா திறந்துவிடப்படும்.
ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த தோட்டத்தைப் பார்த்துச் செல்வர். இந்த ஆண்டும் மக்கள் பலரும் கூட்டம் கூட்டமாக தோட்டத்தைக் கண்டு களித்துள்ளனர்.