Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எல்லோரா குகையின் அதிசயங்கள்

எல்லோரா குகையின் அதிசயங்கள்
, புதன், 10 ஏப்ரல் 2013 (18:13 IST)
வரலாற்றுப் புகழ்மிக்க கலையின் ஊற்றுக்கண் அமைந்துள்ள எல்லோரா குகைகள் உள்ளூரில் 'Verul Leni' என்று அறியப்படுகிறது. இது அவுரங்காபாதிற்கு 30 கிமீ வட‌‌க்கவடமேற்கு திசையில் அவுரங்காபாதுஸாலிஸ்கான் சாலையில் அமைந்துள்ளது இந்த உலகப்புகழ்பெற்ற எல்லோரா குகைகள்.



உலகில் எங்கும் காணப்படாத குகைக் கோயில்கள் கொண்டது எல்லோரா. அதிலும் ஒரே கல்லை குடைந்து செதுக்கப்பட்ட கைலாசா குகை உலகப்புகழ் பெற்றது என்பதில் இருவேரு கருத்துகள் இல்லை.

மழைக்காலங்களில் இந்த எல்லோரா குகைகளை பார்ப்பதே மனதிற்கும் ஆன்மாவிற்கு உடலுக்கும் மிகவும் ஆரோக்கியமானது. காட்சியழகும், கருத்தழகும் மிகுந்தது எல்லோரா. மழைக்காலங்களில் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி பச்சைப் பசேலென்று காட்சியளிக்கும்போது எல்லோரா ஒரு பெரிய காவியப் பாடலென்றே கூறவேண்டும்.

தெக்காணப்பாறை படிவு என்று அறியப்படும் மகாராஷிட்ராவின் எரிமலைப் பாறை உருவாக்கங்கள் கொண்டு குகைகள் குடையப்பட்டு பெரும் அதிசயமாக உருவாக்கப்பட்டுள்ளது. பாறைப்படிவுகள் உருவாக்கத்தினால் கூரைகள் ஏதோ 'பிளாட்' மேற்புறமாக தோற்றம் தருகின்றன.

32ஆம் எண் குகை அருகே எரிமலை குழம்பு ஓடிவந்த பாதைகளை காணமுடியும். இந்தப்பாதைகள் கடுமையான வெப்பத்தினால் சிவப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் காட்சியளிக்கும்.
 
webdunia
 
FILE
இதுபோன்ற பாறையால் கட்டப்பட்டதே அருகில் உள்ள கிரிஷ்னேஷ்வர் கோயில். மேலும் பீபி-கா மாக்பராவின் நடைபாதை வழித் தரையிலும் இத்தகைய பாறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்தக் குகைகள் குடையப்பட்ட மலைகள் சாயாத்ரி மலைத் தொடரைச் சேர்ந்தவை. இந்த மலைகளுக்கு வயது 65 மில்லியன் ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது. தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த மலைகள் எழும்பியுள்ளன. இதில் மேற்குப்பகுதி மலைகள்தான் குகைகள் குடையப்பட்டுள்ளது. பல நதிகளுக்கு மூலஸ்தானம் இந்த மலைகள் என்றால் மிகையாகாது. இதில் குறிப்பாக 'எலகங்கா' நதி குறிப்பிடத்தகுந்தது. இதுதான் குகை எண் 29 அருகே ஒரு அழகான அருவியாக கீழே விழுகிறது.

எரிமலைக் குழம்பின் தன்மை மற்றும் அதன் கனிமவள அடர்த்தியைப் பொறுத்து எரிமலைப்பாறைகளும் படிவுகளும் பல்வேறு தரப்பட்டு உருவாகியுள்ளது.
 

webdunia
FILE
குடையும் காலங்களில் இந்தப்பாறைகள் அவ்வளவு திண்மையாக இருக்கவில்லை இதனால் குடைவு ஓரளவுக்கு எளிதாக இருந்தது. நாளாக நாளாகவே இது இறுகியுள்ளது.

இந்தப்பாறைக் குடைவுகளின் மடம் போன்ற அல்லது கோயில் போன்ற அமைப்புகளினால் மத இயக்கங்களின் செயல்பாடுகள் இங்கு அதிகம் இருந்தது. மகாராஷ்டிராவில் மட்டும் பல்வேறு அளவில் சுமார் 1200 குகைகள் உள்ளன. இதில் 900 குகைகள் பவுத்த மதம் சார்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கது.

பண்டைய நூற்றாண்டுகளில் எல்லோராவின் முக்கியத்துவம் அப்பகுதியில் ஆட்சி செய்த சதவாகனர்கள் காலத்து நாணயங்களை வைத்து பேசப்பட்டு வந்தது. சதவாகனர்கள் தங்களது தலைநகாராக தற்போது பைத்தான் என்று அழைக்கப்படும் நகரைக் கொண்டிருந்தனர். அரபிக்கடல் மற்றும் வங்காள விரிகுடா எல்லைப்பகுதிகளில் சதவாகனர்களின் ஆட்சி கொடிகட்டிப் பறந்ததாக கூறப்படுகிறது.

பண்டைய வர்த்தக வழித்தடங்களின் மையத்தில் எல்லோரா இருந்துள்ளது. ஆனாலும் இந்த வர்த்தக நடவடிக்கைகளால் எல்லோரா பெரிதாக மாறிவிடவில்லை. இந்த வர்த்தக மைய பகுதியினால் அருகில் இருந்த நாசிக், அஜந்தா குகை போன்றவை பெரிதும் வளர்ந்தன.

webdunia
FILE
எல்லோராவில் அதன் பிறகு பவுத்தம், இந்துமதம் மற்றும் ஜைன மதம் ஆகியவை எல்லோரா குகைகளை குடைந்து கலை ஓவியங்களை உருவா‌க்கினர். மலைத்தொடரில் சுமார் 100 குகைகள் உள்ளன. இதில் 34 குகைக‌ள் மட்டுமே பயணிகளை ஈர்த்துள்ளது. இதில் எண் ஒன்று முதல் 12 வரையிலான குகைளில் பவுத்தக் கலைகளை காணலாம். குகை எண் 13 முதல் 29 வரை இந்து அல்லது பிராம‌ணிய கலைப் படைப்புகளை காணலாம். 30 முதல் 34ஆம் குகைகள் ஜைன மதம் சார்ந்தவை.

எல்லோரா குகை கி.பி. 19ஆம் நூற்றாண்டில் ஹோல்கர்கள் என்பவர்களது உரிமையின் கீழ் வந்தது. பிறகு ஐதராபாத் நிஜாம் ராஜ்ஜியத்தின் கீழ் வந்தது.

அனைவரும் பார்த்து மகிழ்ச்சியடைந்து, பிரமித்துப் போகவேண்டிய ஒரு தலம்தான் எல்லோரா எ‌ன்றா‌ல் அது ‌மிகையாகாது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எதிர்ப்பு - இலங்கை பயணத்தை ரத்து செய்த பாடகர்கள்