Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முதலியார் குப்பத்தில் பலூனில் பறக்கும் சாகச‌ம்

முதலியார் குப்பத்தில் பலூனில் பறக்கும் சாகச‌ம்
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:18 IST)
பய‌ணிகளை‌க் வெகுவாக‌க் கவரு‌ம் பலூ‌ன் சாகச ‌விளையா‌ட்டு ‌விளையாட வே‌ண்டு‌ம் எ‌ன்றா‌ல் சென்னையை அடுத்த முதலியார் குப்பம் மழைத்துளி படகு இல்லத்தி‌ற்கு‌ச் செ‌ன்றா‌ல் போது‌ம்.

செ‌ன்னையை அடு‌த்த முத‌லியா‌ர் கு‌ப்ப‌ம் மழை‌த் து‌‌ளி படகு இ‌ல்ல‌த்‌தி‌ல், 200 அடி உயரத்தில் பலூனில் பறக்கும் சாகச விளையாட்டை அமைச்சர் சுரேஷ்ராஜன் தொடங்கி வைத்தார்.

சென்னையில் இருந்து 96 கிலோ மீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 36 கிலோ மீட்டர் தூரத்திலும் கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது முதலியார் குப்பம் மழைத்துளி படகு இல்லம். இந்த சுற்றுலா தலத்தை கடந்த 3 ஆண்டுகளாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் மேம்படுத்தி வருகிறது. சுற்றுலா பயணிகள் வசதிக்காக இங்கு பல்வேறு வகையான படகுகள், அதிவிரைவு படகுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம், தனியார் நிறுவனத்துடன் இணைந்து காற்றில் 200 அடி தூரத்தில் பறக்கும் ராட்சத பலூன் சாகச விளையாட்டையும், நீர் சறுக்கு விளையாட்டையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதற்கான தொடக்க விழா முதலியார்குப்பம் மழைத்துளி படகு இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்றது. சுற்றுலாத்துறை அமைச்சர் சுரேஷ்ராஜன் கலந்து கொண்டு சாகச விளையாட்டுகளை துவ‌க்‌கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை செயலாளர் வெ.இறையன்பு, சுற்றுலாத்துறை நிர்வாக இயக்குனர் மோகன்தாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த ராட்சத பலூனில் பறக்க 2 பேருக்கு ரூ.1,200 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நீர் சறுக்கு விளையாட்டுக்கு நபர் ஒருவருக்கு ரூ.500 கட்டணமாகும்.


Share this Story:

Follow Webdunia tamil