Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மார்கழி: திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை ரத்து

மார்கழி: திருப்பதி கோவிலில் சுப்ரபாத சேவை ரத்து
, செவ்வாய், 8 டிசம்பர் 2009 (12:07 IST)
மார்கழி மாதத்தை முன்னிட்டு, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, தேவஸ்தானத்தில் திருப்பாவை பாசுரங்கள் பாடப்படும்.

திருப்பதியில், கோதநாயகியான ஆண்டாள், மார்கழி மாதத்தில் பக்திப்பாடல்கள் பாடி இறைவனை வேண்டினார். அதைத்தொடர்ந்து 30-வது நாள் ரங்கநாதரை திருமணம் செய்து கொண்டதாக ஐதீக வரலாறு.

அதை வெளிப்படுத்தும் வகையில், திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் ஆண்டாள் அருளிய திருப்பாவை பாசுரங்கள் பாடப்படுவது வழக்கம்.

வருகிற 16-ந் தேதி காலை 9.45 மணிக்கு மார்கழி மாதம் பிறக்கிறது. எனவே, 17-ந் தேதி (வியாழக்கிழமை) காலையில் இருந்து 30 நாட்களுக்கு (டிசம்பர் 15-ந் தேதி வரை) திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில், மூலவரான வெங்கடாஜலபதி முன்னிலையில் திருப்பாவை பாசுரங்கள் பாடப்படும். இந்த பாடல்களை பெரிய ஜீயர்கள் பாடுவார்கள்.

தேவஸ்தானத்தில் தினந்தோறும் அதிகாலையில் சுப்ரபாத சேவை நடைபெறுவது வழக்கம்.

மார்கழி மாதத்தை முன்னிட்டு, டிசம்பர் 17-ந் தேதி முதல் ஜனவரி 15-ந் தேதி வரை திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தில் சுப்ரபாத சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil