பொதுவாக கோயில்களில் ஆஞ்சநேயருக்கான தனி சன்னதி அமைந்திருக்கும். அதில் எல்லாம் சிறியதாக காட்சி தரும் ஆஞ்சநேயர், அவருக்கான சில கோயில்களில் மிகப் பிரம்மாண்டமாக காட்சி தருவார்.
ஆஞ்சநேயரை ஆஞ்சனேயலு, சஞ்சீவையா, அனுமந்தையா, மாருதி, மஹாவீர், அனுமன் என பலப் பெயர்களில் அழைக்கின்னர். ஆஞ்சநேயருக்கு இந்தியா மட்டுமின்றி உலகின் பல நாடுகளிலும் கோயில்கள் உள்ளன. ஒவ்வொரு கோயிலிலும் ஒவ்வொரு சிறப்புகளுடன் அவர் அருள்பாலிப்பதே ஆஞ்சநேயர் கோயிலின் சிறப்பாகும்.
எல்லாவற்றையும் நம்மால் இங்கு குறிப்பிட இயலாது என்றாலும், நமக்குத் தெரிந்த சில கோயில்களை மட்டும் இங்கு குறிப்பிடுகிறோம்.
இந்தியாவில் பிரம்மச்சாரியாக கருதப்படும் ஆஞ்சநேயர், தாய்லாந்து நாட்டில் மனைவிகளுடன் எழுந்தருளியுள்ளார்.
நங்கநல்லூரில் உள்ள ஆஞ்சநேயர் கோயில், நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்கள் இதற்கு உதாரணங்கள். இதுமட்டுமல்லாமல் அவர் பல்வேறு சிறப்புகளுடன் ஒவ்வொரு இடத்திலும் கோயில் கொண்டுள்ளார்.
இசை ஞானியாகவும் ஆஞ்சநேயர் அருள் பாலிக்கின்றார். அதாவது, திருவையாறு புது அக்ரஹாரத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் இடது கையில் புத்தகத்தையும், வலது கையில் வீணையையும் கொண்டு இசைஞானியாக காட்சி தருகிறார்.
அதோடு மட்டுமல்லாமல், கும்பகோணம் ராமசாமி கோயில் சென்றால் அங்கு சரஸ்வதியைப் போன்று வீணை மீண்டும் ஆஞ்சநேயரைப் பார்த்து தரிசிக்கலாம்.
நாமக்கல் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரம் கொண்டவர். இவருக்கு அருகில் உள்ள ஏணி மீது ஏறித்தான் இவருக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை எல்லாம் செய்கிறார்கள்.
புதுக்கோட்டையில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் உள்ள ஆஞ்சேநயர் தனது ஒரு கையில் பாம்பை பிடித்தபடி நிற்கும் காட்சியைக் காண முடிகிறது.
ஐதராபாத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயிலில் ஒட்டகத்தின் மீது எழுந்தருளி ஆஞ்சநேயர் காட்சியளிக்கிறார்.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் மயிலாடுதுறை - பூம்புகார் சாலையில் காவிரி நதிக்கரையோரம் அமைந்துள்ள மேல்பாதி என்ற அழகான ஊரில் இரட்டை ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. இங்கு ஒரே சன்னதியில் இரட்டை ஆஞ்சநேயர்கள் உள்ளனர்.