Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆனைமலை, முதுமலை சரணாலயங்கள் திறப்பு

ஆனைமலை, முதுமலை சரணாலயங்கள் திறப்பு
, வெள்ளி, 23 செப்டம்பர் 2011 (17:17 IST)
ப‌ல்வேறபாதுகா‌ப்பகாரண‌ங்களு‌க்காமூட‌ப்ப‌ட்டிரு‌ந்ஆனைமலை, முதுமலசரணாயல‌ங்க‌ளஇர‌ண்டமாத‌ங்களு‌க்கு‌ப் ‌பிறகு ‌திற‌ந்து‌விட‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் டாப்சிலிப், குரங்கு அருவி, பஞ்சலிங்க அருவி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் உள்ளன.

கோடைக்காலத்தையொட்டி வனப்பகுதியில் தீ விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், வனவிலங்குகள் பாதுகாப்பு கருதியும் கடந்த மார்ச் முதல் தேதியில் இருந்து ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட சுற்றுலா மையங்களுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

டாப்சிலிப், மானாம்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் கோடை மழை லேசாக பெய்துள்ளதால் குடிநீர் கிடைத்துள்ளது. இதனால் நேற்று முதல் சுற்றுலா பயணிகளுக்கு தடை நீங்கியது.

நீலகிரி மாவட்ட‌த்‌தி‌லஉ‌ள்முதுமலை சரணாலயம் த‌ண்‌ணீ‌ர் வறட்சி மற்றும் காட்டுத்தீ காரணமாக பிப்ரவரி 15ம் தேதி முத‌ல் மூடப்பட்டது.

நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இங்கு காலை 7 முதல் 9 மணி வரை, மாலை 4 முதல் 5 மணி வரை யானை சவாரி நடைபெறும். காலை 7 முதல் 9 மணி வரை, மாலை 4 மணி முதல் 6 மணி வரை வனத்துறையினர் சுற்றுலா பயணிகளை வாகனங்கள் மூலம் வனப்பகுதிக்குள் அழைத்து செல்வர். முதுமலையில், வன உயிரின கணக்கெடுப்பு பணி வரும் 3ல் துவங்கி 5ம் தேதி வரை நடக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil