சமீப காலமாக உடல்நலத்திறாக பலரால் பருகப்பட்டும் பானம் க்ரீன் டீ. க்ரீன் டீ ஆரோக்கியமானதுதான் என்றாலும் அதை சரியான விகிதத்தில் சரியான நேரத்தில் பருகாவிட்டால் விளைவுகளை ஏற்படுத்தும். அதுகுறித்து பார்ப்போம்.
-
க்ரீன் டீயில் விட்டமின் பி, ஃபோலேட் சத்து, மக்னீசியம் ஆகியவை செறிவாக உள்ளன.
-
க்ரீன் டீயை டீ தூளாக அல்லாமல் இலைகளாக உள்ளவற்றையே பயன்படுத்த வேண்டும்.
-
க்ரீன் டீ இலைகளை இரண்டு நிமிடத்திற்கு மேல் கொதிக்க வைக்கக்கூடாது.
-
க்ரீன் டீயில் சர்க்கரை போன்றவற்றை கலக்காமல் குடிக்க வேண்டும்.
-
க்ரீன் டீ குடிக்க சிரமமாக இருந்தால் எலுமிச்சை சாறு அல்லது சிறிது தேன் மட்டும் சேர்க்கலாம்.
-
ஒரு நாளைக்கு மூன்று கப் அளவிற்கு மேல் க்ரீன் டீ அருந்துவது நல்லதல்ல.
-
அல்சர் பிரச்சினை உள்ளவர்கள் வெறும் வயிற்றில் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும்.