Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

குடும்ப தலைவிகளுக்கு பயன்தரும் கிச்சன் டிப்ஸ்...!

Advertiesment
குடும்ப தலைவிகளுக்கு பயன்தரும் கிச்சன் டிப்ஸ்...!
கொள்ளு பயரை 1 மணி நேரம் ஊறவைத்து தண்ணீரை வடித்து, கடாயில் வறுக்கவும். வறுக்கும்போதே 1 டீஸ்பூன் எண்ணெய்யுடன் மிளகாய் பொடி, உப்பு, பூண்டு, கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். மாலை நேரத்தில் சாப்பிட சுவையாக இருக்கும். உடலில் உள்ள கொழுப்புகள்  கரையும்.
தோசைக்கு அரைக்கும்போது கைப்பிடி தோல் நீக்கிய வேர்க்கடலையையும் சேர்த்து அரைத்து தோசை சுட்டுப் பாருங்களேன். புது சுவையாக  இருக்கும். ரசத்துடன் சிறிது மட்டன் சூப்பைச் சேர்த்தால் ரசம் ருசியாக இருக்கும்.
 
காய்கறிகள் வதங்கி போய்விட்டால் தூக்கி எறியாமல் அதில் சில துளி எலுமிச்சை பழச்சாறு பிழிந்துவிட்டால், சில மணி நேரத்தில் காய்கறிகள் வதங்கிய தன்மை மாறி புதியதாக பளிச்சென்று இருக்கும்.
webdunia
வெந்தயக்கீரை சமைக்கும்போது சிறிது வெல்லம் சேர்த்தால் அதிலுள்ள கசப்பு சுவை நீங்கி விடும்.
 
பிஞ்சாக உள்ள பீன்ஸை நாரெடுத்து விட்டு நீளவாக்கில் அரிந்து கொண்டு அத்துடன் பெரிய வெங்காயத்தையும் கலந்து பக்கோடா செய்தால் எண்ணெயில் வெந்த பீன்ஸ் வித்தியாசமான சுவையுடன் உண்பதற்கு நன்றாக இருக்கும்.
 
நார்த்தங்காய் ஊறுகாய் போடும் போது 1 டீஸ்பூன் மிளகு, 1 டீஸ்பூன் சீரகம் இரண்டையும் லேசாக வறுத்து அரைத்து போட்டால், சுவையாக இருப்பதுடன் நார்த்தங்காயின் ஈரத்தன்மை நீங்கும்.
 
வாழைக்காயை நறுக்கும் முன் கைகளில் உப்பு தூளை தடவிக் கொண்டால் கைகளில் பிசுபிசுப்பும், கரையும் வராது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குடலிறக்கத்தால் ஏற்படும் வலியைக் கட்டுப்படுத்தும் மருத்துவ குறிப்புகள்!!