Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Saturday, 5 April 2025
webdunia

சிறுநீரக பாதிப்புகளை போக்க உதவும் செடி இதுதான் !!

Advertiesment
சிறுகண் பீளை
, செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (00:50 IST)
சிறுநீரை பெருக்கி கற்களை கரைக்கும் சிறு பீளை செடி இதனை ஆங்கிலத்தில் ஏர்வளநாட்ட என்று அழைக்கிறார்கள். கன்னு புள்ள செடி என்று கிராம பகுதிகளில்  அழைப்பதுண்டு.
 
சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்றும் சொல்லபடுகிறது. இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள். மாட்டு பொங்கள் நாளில் மாடுகளுக்கு மாவிலை, வேப்பம் இலை என்று இதனையும் சேர்த்து மாலையாக்கி மாடுகளுக்கு கட்டுவது உண்டு.
 
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும்.ஒவ்வொரு  இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும்  மருந்தே.
 
வேருடன் பிடுங்கி வந்து கழுவிய பின் அப்படியே 1லிருந்து 2 லிட்டர் வரையிலான தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின் சாறு இறங்கிய தண்ணீரை  அப்படியே காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
 
சிறுநீரகக் கல் உள்ளிட்ட அனைத்து வகை சிறுநீரக பாதிப்புகளைப் போக்கும், உடல் வெளுத்து இருத்தல், பெண்களின் மாதாந்திர பாதிப்புகள் போன்றவற்றை  சரிசெய்யும்.
 
சிறுகண்பீளை இலைகளை அரைத்து சாறெடுத்து, தினமும் இருவேளை பருகி வர, நீர்ச் சுருக்கு மற்றும் அடைப்பு, மாதாந்திரப் போக்கின் போது உண்டாகும் அதீத  உதிரப் போக்கு பாதிப்புகள் ஆகியவை நீங்கி விடும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம்!!