Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அன்றாட உணவில் அவசியம் சேர்க்கவேண்டியவை இவை தான் !

Tamil New Year - Foods
, புதன், 11 மே 2022 (23:58 IST)
அன்றாட உணவில் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளையும், காய்கறிகள் மற்றும் பழங்களையும் சாப்பிட்டு வந்தால் உடல் நீதியாக ஏற்படும் ஆரோக்கிய குறைபாடுகளை தவிர்க்கலாம்.
 
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த அன்றாட உணவில் அவசியம் சேர்க்க வேண்டிய பொருட்கள் சிலவற்றை பார்ப்போம்.
 
தேங்காயில் பல நன்மைகள் உண்டு. இதில் வைட்டமின் A, B சிறிதளவு உள்ளது. எனவே இது குடல் புண்ணையும் ஆற்றும் தன்மைக் கொண்டது. இத்தகைய சத்துக்களை கொண்ட தேங்காயின் வழுக்ககையில் கற்கண்டு சேர்த்து சாப்பிட்டால் மூலச்சூட்டை தடுக்கலாம்.
 
நார்ச்சத்துகள் நிறைந்த வாழைத்தண்டை உணவில் சேர்த்துக் கொண்டால், அது பித்தம், வாதம் மற்றும் உடல் சூட்டை தணித்து குடலில் சிக்கிய முடி, நஞ்சு ஆகியவற்றை நீக்க உதவுகிறது.
 
நீர்ச்சத்து மிகுந்த காய்களில் ஒன்றான புடலங்காயை உணவில் சேர்த்துக் கொண்டால், அது ஜீரண சக்தியை அதிகரித்து வாதம், பித்தம், கபம்  போன்றவற்றை நீக்கும்.
 
இஞ்சியை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். அது நோய் எதிர்ப்பு சக்தி நிரம்பியது. இதயநோய், நீரிழிவு, பக்கவாதம், புற்றுநோய் போன்றவை ஏற்படாமல் இஞ்சி பாதுகாக்கும். 
 
வைட்டமின், B, C, உயிர்சத்துக்களை கொண்ட வெண்டைக்காயுடன் சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் மிகவும் நல்லது. இது உடலின் சூட்டை தணித்து குளிர்ச்சியை ஏற்படுத்தி, உஷ்ண இருமல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளை குணமாக்கும்.
 
அவரைக்காய் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. அதிக உடல் சூடு மற்றும் உடல் எடை, ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனை உள்ளவர்கள், இதை சாப்பிடுவதால் உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.
 
பிஞ்சு கத்தரிக்காயில் உள்ள வைட்டமின்கள் தசை மற்றும் ரத்தத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி வாயு, பித்தம், கபம் போன்ற  பிரச்சனைகளை குணமாக்க உதவுகிறது. மேலும் அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பிஞ்சு கத்தரிக்காயை சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்  கிடைக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வயிற்று பிணிகளை போக்கி நிவாரணம் தரும் கடுக்காய் !!