Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பல நோய்களுக்கு தீர்வுதரும் தொட்டாற்சுருங்கி!!

பல நோய்களுக்கு தீர்வுதரும்  தொட்டாற்சுருங்கி!!
, சனி, 12 மார்ச் 2022 (00:23 IST)
காடுகளிலும், மலைப்பகுதிகளிலும் காணப்படும் தொட்டாற்சுருங்கி செடி தொட்ட உடன் தன்னை சுருக்கிக் கொள்ளும். காந்த சக்தி உடைய மூலிகை என்று சித்தர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தெய்வீக மூலிகையை தொடர்ந்து 48 நாட்கள் தொட்டுவந்தால் மனோசக்தி அதிகரிக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
 
ஆயுர்வேத மருத்துவத்திலும் யுனானி மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகிறது. தோல்வியாதிகள், குழந்தைப்பேறு பிரச்சனை, ஆண்மைகுறைபாடு போன்ற நோய்களுக்கு இன்றைக்கு மிகச்சிறந்த மருத்துவ மூலிகையாக உள்ளது தொட்டாற்சுருங்கி. 
 
தொட்டாற்சுருங்கி வேரினை பஞ்சுபோல் தட்டி ஒரு மண் குடுவையில் போட்டு கால் படி தண்ணீர் விட்டு அடுப்பிலேற்றி  சுண்டக் காய்ச்சவும், பின்னர் இதனை வடிகட்டி வேளைக்கு கால் அல்லது அரை அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். அல்லது ஒரு பங்கு இலைக்கு 10 மடங்கு கொதிக்கின்ற தண்ணீர் விட்டு ஆறின பின் வடிகட்டி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் தினம் 2-3 வேளை கொடுக்கவும். இவற்றால் நீர் அடைப்பு, கல்லடைப்பு தீரும். 
 
ஆண்மைக்குறைபாடு உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து பாலில் 15 கிராம் கலந்து சாப்பிடவேண்டும். தொடர்ந்து 15 நாட்களுக்கு சாப்பிட்டு வர ஆண்மை பெருகும். உடல் குளிர்சியடையும், வயிற்றுப்புண்ணும் ஆறும். மூலநோய் நீங்கும். 
 
சூடு பிடித்து சிறுநீர் எரிச்சல் உள்ளவர்கள் இதன் இலையை அரைத்து 5-6 நாள் 10 கிராம் காலை தயிரில் சாப்பிட வேண்டும் இதனால் சூடு குறைந்து சிறுநீர் எரிச்சல் குணமாகும். இதன் இலை ஒரு பிடி அரைத்து எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். 
 
தொட்டாற்சுருங்கி இலையையும், வேரையும் உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு பசுவின் பாலில் போட்டுக்  கொடுத்துக் கொண்டு வர மூலம், பவுத்திரம் போம். இதன் இலையை ஒரு பெரிய மண்கலயத்தில் போட்டு தண்ணீர் விட்டு  வேக வைத்து இடுப்பிற்கு சூடு தாங்குமாறு இடுப்பின் மீது ஊற்ற இடுப்புவலி குணமாகும்.
 
தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றைப் பவுத்திர மூல ரணங்களுக்கு ஆசனத்தில் தடவி வர ஆறும். இதன் இலையை மெழுகு  போல அரைத்து விரை வாதம், கை, கால் மூட்டுக்களின் வீக்கம் இவைகளுக்கு வைத்துக் கட்ட குணமாகும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்த ஆப்பிள் !!