Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெங்காயத்தின் மூலம் நோய்களுக்கு இயற்கையான முறையில் தீர்வு!

Webdunia
புதன், 13 ஏப்ரல் 2022 (23:53 IST)
தூக்கமில்லாமல் கஷ்டப்படும் குழந்தைகளுக்கு சிறிய வெங்காயத்தைத் தண்ணீரில் கொதிக்க வைத்து எடுத்த தண்ணீரில்  இரண்டு ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொடுக்க நல்ல தூக்கம் வரும். 
 
சிறு குழந்தைகளுக்கு உண்டாகும் டான்சில் வியாதிக்கு ஒரு சிறிய வெங்காயத்தை தோல் நீக்கி சிறிது உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு, குளிர்ந்த தண்ணீரைச் சாப்பிட செய்வதன் மூலம் ஓரளவு குணம் கிடைக்கும். 
 
காது வலிக்கு வெங்காயத்தை நறுக்கி அதன் உள்ளே உள்ள குருத்தை இடித்துப் பிழிந்த சாறைச் சில துளிகள் எடுத்து லேசாகச்  சுட வைத்து காதில் விட்டால் வலி, குத்தல் நிற்கும். 
அஜீரணத்தால் வாந்தி, பேதி அடிக்கடி மணிக்கு ஒரு தடவை உண்டானால் வெங்காயச்சாறு அரை அவுன்ஸ் வீதம் குளிர்ந்த  நீரில் கலந்து அடிக்கடி கொடுத்துவர ஜீரண சக்தி உண்டாகி வாந்தி, பேதி நிற்கும். 
 
விஷப்பூச்சிகளால் உண்டான வாந்திபேதியில் ஆரம்பத்திலேயே வெங்காயச்சாறு ஒவ்வொரு அவுன்ஸும், 2, 3 சிட்டிகை  பெருங்காயத் தூளும் கலந்து அரை மணிக்கு ஒரு தடவை கொடுக்க குணமாகும். இந்த நிலையில் கை, கால் குளிர்ந்து  காணப்பட்டால் வெங்காயத்தின் சாற்றையே பாதங்களிலும் உள்ளங்கைகளிலும் தடவி சூடு வரும்படி தேய்க்க வேண்டும். 
 
தோல் நீக்கிய வெங்காயத்தைச் சிறு துண்டாக நறுக்கி குளிர்ந்த நீரில் நான்கு அல்லது ஐந்து தடவை அலம்பி தயிர் சேர்த்து  தினம் மூன்று முறை உட்கொள்ள வயிற்றுக் கடுப்பு நீங்கும். 
 
மூக்கிலிருந்து ரத்தக்கசிவு ஏற்படும்போது வெங்காயத்தைக் கசக்கி முகர்ந்தால் உடன் ரத்தக்கசிவு நிற்கும். 
 
வெங்காயச்சாறு அல்லது வெங்காயச்சாறும் நல்லெண்ணெயும் சம அளவு கலக்கி அதன் சில துளிகளை யாவது வலிக்கும்  சொத்தைப் பற்களில் வைத்தால் சிறிது நேரத்தில் பூச்சிகளும் இறந்து வலியும் நின்றுவிடும். 
 
வெங்காயச்சாறு அரை அவுன்ஸும், சுத்தமான தேன் கால் அவுன்ஸும் கலந்து காலை, மாலை 2 வேளை வீதம் 25 நாட்கள்  தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்களுக்கு வீரியம் அதிகரிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உடற்பயிற்சி செய்தாலும் மாரடைப்பு வரும்.. காரணம் இதுதான்..!

மூட்டு வலி முதல் புற்றுநோய் வரை அனைத்தையும் குணமாக்கும் இஞ்சி..!

பித்தப்பை கல்லை இயற்கையாக அகற்றுவது எப்படி?

பற்களை சரியாக பராமரிக்காவிட்டால் மூட்டு வலி வருமா?

மழைக்காலத்தில் வெந்நீர் குடிக்க வேண்டும்.. என்னென்ன நன்மைகள் தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments