Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மருத்துவகுணம் நிறைந்த இலவங்கப் பட்டை

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (01:25 IST)
இலவங்கப் பட்டை என்பது சமையலுக்கு அதிகமாக பயனபடுத்தப்படும் ஒரு மசாலா பொருளாகும். இவை உடல் எடையை குறைப்பதற்கு மட்டும் பயன்படுவதோடு ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் கொண்டுள்ளது.
 
பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இதில் பொட்டாசியம், மாங்கனீசு, கால்சியம், மக்னீசியம், ஜிங்க் மற்றும் இரும்புச்சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளன.
 
Lஇலவங்கப் பட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் நமது இரத்த அழுத்தத்தையும், இரத்த சர்க்கரை அளவையும் குறைக்கிறது. மேலும் சுவாச பிரச்சனை மற்றும் ஜீரண பிரச்சனை போன்றவற்றிற்கு மருந்தாகவும் செயல்படுகிறது.
 
பட்டையில் உள்ள ஆன்டி கார்சினோஜெனிக் என்ற பொருள் புற்றுநோய் செல்கள் வருவதை குறைக்கிறது. எனவே பட்டை தண்ணீர்  புற்றுநோயை தடுக்க உதவுகிறது.
 
உங்களுக்கு காது கேட்பது சரியாக கேட்கவில்லை என்றால் அதற்கு இந்த பட்டை தண்ணீர் போதும். ஏனெனில் இதிலுள்ள பொருட்கள் காதின்  கேட்கும் திறனை அதிகரிக்கிறது.

நீங்கள் பல்வலியால் அவதிப்பட்டால் அதற்கு இந்த பட்டை சிறந்த பலனை கொடுக்கும். தினமும் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல்வலி மற்றும் பற்களின் ஈறுகளில் உள்ள வீக்கமும் குறையும்.
 
பட்டை தண்ணீரில் பாலிபினோல் என்ற, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்து, டைப் 2 டயாபெட்டீஸ் வராமல் தடுக்கிறது. மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரை  அளவை கட்டுப்பாட்டில் வைத்து கொள்ளலாம்.
 
பட்டை தண்ணீர் உங்கள் சருமத்தையும், அதே நேரத்தில் சருமத்திற்கு நல்ல நிறத்தையும் கொடுக்கிறது. இதிலுள்ள நார்ச்சத்துகள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி விடுகிறது. எனவே நச்சுகள் நமது சருமத்தில் தங்காமல் ஆரோக்கியமாக இருக்க நினைத்தால், இந்த  பட்டை தண்ணீரை தினமும் அருந்தி பலன் பெறலாம்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகரித்து வரும் பெருங்குடல் புற்றுநோய்! வராமல் தடுப்பது எப்படி?

குக்கரில் சாதம் சமைத்து சாப்பிட்டால் உடல்நலத்திற்கு தீங்கா? அதிர்ச்சி தகவல்..!

உணவில் வெண்ணெய் சேர்த்தால் உயிருக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி முடிவு..!

வெயில் காலத்தில் நன்மை செய்யும் வெங்காயம்.. தினமும் சாப்பிடுங்கள்..!

டீ, காபி அதிகமாக குடித்தால் உடல்நலனுக்கு ஆபத்தா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments