Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

முருங்கைக்காயில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

முருங்கைக்காயில் உள்ள  ஏராளமான நன்மைகள் !!
, புதன், 27 ஜனவரி 2021 (23:55 IST)
முருங்கைக்காய் சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. முருங்கைக்காயில் சாறு எடுத்து பசும்பாலுடன் சாப்பிட்டு வந்தால், குழந்தைகளுக்கு  எலும்பு பலப்படும். 
 
முருங்கைக்காயை சாப்பிடுவதன் மூலம் உடலில் உள்ள ரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. கர்ப்பிணிகள் முருங்கைக்காயை கட்டாயம் சாப்பிட வேண்டும். ஏனெனில் பிரசவத்துக்கு பின்பு ஏற்படக்கூடிய பிரச்சினைகளை முருங்கைக்காய் நீக்குகிறது. பசியை அதிகரிக்க உதவுகிறது.
 
முருங்கைக்காயை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு பாலுணர்ச்சி தூண்டப்படுவதோடு, விறைப்புத்தன்மை குறைபாடு, விரைவில் விந்து வெளியேறுதல், மலட்டுத்தன்மை போன்ற அத்தனை பிரச்சனைகளும் தீருகின்றன.
 
முருங்கைக்காயில் இரும்பு, கொழுப்பு, புரதம், கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஏ’ மற்றும் ‘சி’ ஆகிய சத்துகள் உள்ளன. முருங்கைக்காயை ‘சூப்’ செய்து குடித்தால் இருமல், தொண்டை வலி, நெஞ்சு எரிச்சல் நீங்கும். 
 
முருங்கைக்காயை வேகவைத்து அதில் வருகிற ஆவியை சுவாசித்தால் ஆஸ்துமா, நுரையீரல் தொடர்பான நோய்கள் குணமாகும். 
 
முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது இதை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு எலும்புகள் உறுதியடைவதோடு  எலும்புகள் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் வெகுவாக குறைகிறது.
 
முருங்கைக்காய் சாறை முகத்தில் தடவினால் முகம் பொலிவுப்பெறும். அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து தடவி வர முகத்துக்கு மினுமினுப்பு அதிகரிக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தேனில் நிறைந்துள்ள நன்மைகள்...