Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பலன் தரும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...

பலன் தரும் வீட்டு வைத்திய முறைகளை பற்றி தெரிந்து கொள்வோம்...
இஞ்சி மூட்டு வலி உட்பட எந்த வலியையும் போக்கும். கொதிக்கும் தண்ணீரில், இரண்டு துண்டு இஞ்சியை நறுக்கிப் போட்டு, அந்த  தண்ணீரை குடித்து வாருங்கள்; அப்புறம் தெரியும் இஞ்சியின் மகிமை. மோர், ஜூஸ் என்று, எந்த பானம் குடித்தாலும், அதில்  ஒரு ஸ்பூன் இஞ்சி சாறை கலந்து குடியுங்கள்.

 
* மஞ்சள், அருகம்புல் மற்றும் சுண்ணாம்பு கலந்து நகச்சுற்று ஏற்பட்டிருக்கும் விரலில் கட்ட நகச்சுற்று குணமாகும். அல்லது கொழுந்து வெற் றிலையுடன் சுண் ணாம்பு சேர்த்தும் கட்டலாம்.
 
* வேப்பம் பூவை உலர்த்தி, தூள் செய்து, வெந்நீரில் கலந்து உட்கொள்ள, வாயுத் தொல்லை நீங்கும். வேப்ப எண்ணெயை காய்ச்சி,சேற்றுப்புண் உள்ள இடங்களில் தடவ குணம் கிடைக்கும்.
 
* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும். 
 
* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச்  சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும். 
 
* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
 
* இரவில் படுக்கப் போகும்முன் வெந்நீரில் சிறிது தேன் கலந்து அந்த நீரில் வாயைக் கொப்பளித்து வந்தால் பற்களுக்குத்  தொந்தரவு கொடுக்கும் பாக்டீரியாக் கிருமிகள் செத்துப் போகும். பற்கள் எனாமல் சிதையாமல் இருக்கும். 
 
* மஞ்சளை ஒரு கல்லில் உறைத்து ஒரு சலவைச் சோப்புத் துண்டை அதில் குழப்பினால் சிகப்பாகப் பசைபோல் வரும். இதை வேனல் கட்டியின் மேல் பூச, வேனல் கட்டி உடைந்துவிடும். சீழ் வெளியேறும். 
 
* நுனா இலையோடு சிறிதளவு சீரகம், நெற்பொரி கலந்து தண்ணீர் விட்டு ஒரு சட்டியில் காய்ச்சி கஷாயம் செய்து குடித்து  வந்தால் நாவறட்சி அடங்கும். 
 
* வெள்ளைப் பூசணிக்காய் சாறில் ஒரு கரண்டித் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் மூளைச்சோர்வு நீங்கும். மூளை  உற்சாகத்துடன் இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாப்பிட்டு முடித்தவுடன் என்னென்ன செய்ய கூடாது?