Webdunia - Bharat's app for daily news and videos

Install App

குடும்ப தலைவிகளுக்கான சமையலறை குறிப்புகள்..!

Webdunia
பலமுறை பயன்படுத்தப்படும் அந்த விஷ மருந்துகளோடுதான் காய்கள் விளைகின்றன. அவைகளைத்தான் நாம் வாங்கி வருகிறோம். அப்படியே சமைத்து சாப்பிட்டால் விஷத்தின் தாக்குதல் ஏற்பட்டு, பல்வேறு நோய்கள் தோன்றும். அந்த பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க, காய்கறிகளை சமைப்பதற்கு முன்னால்  நன்றாக கழுவ வேண்டும்.
பூண்டு, சிறிய வெங்காயம், இஞ்சி போன்றவைகளில் இருக்கும் மேல் தோலை நீக்கிவிட்டு பலமுறை நீரில் கழுவிவிட்டு உபயோகப்படுத்தவேண்டும்.
 
புதினா, கறிவேப்பிலை, கீரை போன்றவைகளை பயன்படுத்துவதற்கு முன்பு வினிகர் கலந்த கலவையில் அதை சுத்தம் செய்யவேண்டும். ஒரு லிட்டர்  தண்ணீரில் 20 மில்லி வினிகர் கலந்த திரவத்தில் அல்லது ஒரு லிட்டர் தண்ணீரில் 30 கிராம் அளவுக்கு புளி கலந்த திரவத்தில் அவைகளை பத்து நிமிடங்கள்  வைத்திருங்கள்.
 
பின்பு நன்றாக அலசி எடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரில் சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள். புதினா, கறிவேப்பிலையை அதிக நாட்கள் பயன்படுத்த வேண்டும் என்றால் மேற்கண்ட முறையில் சுத்தம் செய்து தண்ணீர் வடிய வசதியுள்ள பாத்திரத்தில் இரவு முழுவதும் வைத்திருங்கள். பின்பு காட்டன் துணியில் பொதிந்து,  பிளாஸ்டிக் பாத்திரத்தில் அடைத்து பிரிட்ஜில் வைத்து தேவைக்கு பயன்படுத்துங்கள்.
 
முட்டைகோஸ் வாங்கியதும் அதன்மேல் பகுதியில் இருக்கும் மூன்று அல்லது நான்கு அடுக்கு இதழ்களை அப்புறப்படுத்திவிடுங்கள். பின்பு பலமுறை நீரில் கழுவிவிட்டு, சுத்தமான துணியால் துடைத்தெடுத்துவிட்டு பயன்படுத்துங்கள்.
 
நெல்லிக்காய், கோவக்காய், புடலை போன்றவைகளை மென்மையான ஸ்கிரப் பேடு பயன்படுத்தி தேய்த்து கழுவுங்கள். பின்பு மேற்கண்ட ஏதாவது ஒரு  திரவத்தில் பத்து நிமிடம் முக்கிவைத்துவிட்டு, துடைத்து பயன்படுத்துங்கள்.

தொடர்புடைய செய்திகள்

கோடை வெயிலில் ஏசி இல்லாமலே வீட்டை குளுகுளுவென வைப்பது எப்படி?

உடலில் கொழுப்புச்சத்து அதிகமானால் ஏற்படும் ஆபத்துக்கள் என்னென்ன?

கொளுத்தும் கோடை வெயில்.. படுத்தும் சிறுநீர் பாதை தொற்று! – மருத்துவர்கள் அறிவுரை!

முக்கனிகளில் ஒன்றான வாழைப்பழம் சாப்பிடுவதால் என்னென்ன பலன்கள்?

40 வயதுக்கு மேல் கர்ப்பமாவதில் உள்ள சவால்கள் என்னென்ன?

அடுத்த கட்டுரையில்
Show comments