Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள்...

கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள்...
, திங்கள், 3 அக்டோபர் 2016 (15:56 IST)
கோடையில் தொல்லைத் தரும் சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுப்பது எப்படி…? வெயில் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பல்வேறு உடல்நல பிரச்சனைகளும் ஆரம்பமாகும். அப்படி கோடையில் ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று தான் சிறுநீரக கற்கள். இந்தியாவில் மட்டும் சிறுநீரக கற்களால் கிட்டத்தட்ட 5.7 மில்லியன் மக்கள் கஷ்டப்படுகின்றனர்.


 

மற்ற காலங்களுடன் ஒப்பிடுகையில் கோடையில் தான் சிறுநீரக கற்கள் அதிகம் ஏற்படும். அதிலும் கோடையில் அதிகப்படியான வெயிலினால் 40% அதிகமாக சிறுநீரக கற்கள் வருவதற்கு முக்கிய காரணிகளாகும். அதுமட்டுமின்றி, கோடையில் கொளுத்தும் வெயிலினால் உடலில் இருந்து அதிகப்படியான நீரானது வியர்வையின் வழியே வெளியேறுகிறது.

இருப்பினும் பெரும்பாலான மக்கள் தண்ணீர் அதிகம் குடிக்காமல், உடலில் நீர் வறட்சி ஏற்படுகிறது.  தண்ணீர் அதிகம் குடிக்கவும், கோடையில் பகலிலும், இரவில் படுக்கும் முன்னும் தண்ணீர் அதிக அளவில் குடிக்க வேண்டும். அப்படி குடிப்பதோடு, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை சிறுநீரை வெளியேற்ற வேண்டும். கோடையில் சிறுநீரை வெளியேற்றாமல் அடக்கி வைத்தால், அவை சிறுநீரகத்தில் கற்களை உருவாக்கும். எனவே கோடையில் குறைந்தது 3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடியுங்கள்.

கோடையில் தாகத்தை தணிக்க எலுமிச்சை ஜூஸை குடித்து வருவதன் மூலம், சிறுநீரக கற்கள் உருவாவதைத் தடுக்கலாம். கோடையில் ஆக்ஸலேட் என்னும் ஆசிட் அதிக அளவில் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை சிறுநீரகத்தில கால்சியம் ஆக்ஸலேட் சிறுநீரக கற்களை உருவாக்கும்.

இந்த ஆசிட் நிறைந்த உணவுப் பொருட்களாவன சோடா, ஐஸ் டீ, சாக்லேட், ஸ்ட்ராபெர்ரி, நட்ஸ் போன்றவை. காப்ஃபைனைக் குறைக்கவும். காப்ஃபைன் நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் காப்ஃபைன் உடல் வறட்சியை ஏற்படுத்தும். கோடையில் உணவில் உப்பை அதிகம் சேர்க்க வேண்டாம். அப்படி உப்பை அதிகம் சேர்த்தால், அதுவும் சிறுநீரக கற்கள் உருவாக வழிவகுக்கும்.

இறைச்சி, முட்டை, மீன் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். ஏனெனில் இதில் உள்ள பியூரின்ஸ் என்னும் பொருள் யூரிக் ஆசிட்டாக மாற்றும். கோடையில் அதிக அளவில் சாலட்டுகளை எடுத்துக் கொளளலாம். இதனால் உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ள முடியும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நவராத்திரியில் துர்க்காதேவியை வழிபடும் முறைகள்!!!