Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சருமத்திற்கு இளமை தரும் திராட்சையின் அற்புதமான மருத்துவக் குணங்கள்

சருமத்திற்கு இளமை தரும் திராட்சையின் அற்புதமான மருத்துவக் குணங்கள்

Advertiesment
சருமத்திற்கு இளமை தரும் திராட்சையின் அற்புதமான மருத்துவக் குணங்கள்
* திராட்சைச்சாறு தினமும் சாப்பிட மலச்சிக்கல் விலகும். முகம் அழகு பெறும். மூலவியாதி, மூலச்சூடு குறையும். கண் பார்வைத் தெளிவடையும். குடல் புண் விலகும். இரத்தம் சுத்தமடையும். வயிற்றுவலி, வயிற்று உளைச்சல் சரியாகும். உடல் பருமனாக உள்ளவர்கள் தினமும் திராட்சைச் சாறு சாப்பிடுவது நல்லது. திராட்சைச் சாறு மட்டும் சாப்பிட்டுவர பல வியாதிகளைக் குணப்படுத்தும். இயற்கைச் சாறுகளில் திராட்சைச்சாறு மிகவும் அவசியமானது.


 
 
* அநேகமாக மனிதனுக்கு அறிமுகமான முதல் ஜூஸ் இதுவாகத்தான் இருக்கும். ஏன்னா, கி.மு. 1000-ம் ஆண்டிலேயே கிரேப் ஜூஸ் (Grape juice) தயாரிச்சிருக்காங்களாம்!".
 
* இரண்டு கிளாஸ் திராட்சைப் பழரசம் குடிப்பது, ஐந்து பிளேட் பச்சைக் காய்கறிகளை உண்பதற்குச் சமம். ரத்த ஓட்டத்தைத் துரிதமாக்கும்; ரத்தம் கிளாட் ஆவதை, அதாவது, ஆங்காங்கே உறைவதைத் தடுக்கும்.
 
* ஒரு கிளாஸ் கிரேப் ஜூஸில் 80 சதவிகிதம் தண்ணீரும், 60 சதவிகிதம் கலோரிகளும் இருக்கும். நார்ச்சத்து அதிகமுள்ள இதனை "டயட்"டில் இருப்பவர்கள் தயங்காமல் குடிக்கலாம்.
 
* "ரெஸ்வெரட்ரால் (Resveratrol)" எனப்படும் ஒரு வகை இயற்கை அமிலம் கிரேப் ஜூஸில் அபரிமிதமாக உள்ளது. இந்த அமிலம் கேன்சர் செல்களின் வளர்ச்சியை முடக்குவதுடன், தேவை இல்லாத கட்டிகளின் வளர்ச்சியையும் கட்டுப்படுத்துகிறது.
 
* பெண்களுக்குச் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வேதிவினை மாற்றத்தை கிரேப் ஜூஸ் (Grape juice) கட்டுப்படுத்துவதால், மார்பகப் புற்று நோய்க்கான அபாயம் குறைக்கப்படுகிறது.ஆகையால், எல்லோரும் திராட்சைப் பழரசம் அருந்தி, முக்கியமாக சுத்தமான திராட்சைப் பழங்களின் மூலம் தயாரிக்கப்படும் பழரசத்தை அருந்தி, ஆரோக்கியமா இருங்க!
 
* எல்லா வகையான திராட்சையிலும் பொதுவாக வைட்டமின் …ஏ உயிர்சத்து அதிக அளவில் காணப்படும். பொதுவாக சரியாக பசி எடுக்காமல் வயிறு மந்த நிலையில் காணப்படுபவர்கள் கருப்பு திராட்சை எனப்படும் பன்னீர் திராட்சையில் அரைடம்ளர் சாறு எடுத்து அதனுடன் சர்க்கரை சிறிது சேர்த்து அருந்தி வந்தால் மந்த நிலை நீங்கி நன்றாக பசி எடுக்கும்.
 
* பெண்களுக்கு ஏற்படும் சூதக கோளாறுகளுக்கு திராட்சை சாறு ஒரு சிறந்த வரப்பிரசாதமாகும். மாத விலக்கு தள்ளிப்போதல், குறைவாக வும், அதிகமாகயும் போதல் போன்ற குறைபாடுகளுக்கு கருப்பு திராட்சை சாறு அரை டம்ளரில் சிறிது சர்க்கரை சேர்த்து தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் முறையான கால இடைவெளியில் மாதவிலக்கு வெளியாகும். திராட்சை சாற்றினை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வரவேண்டும்.
 
* திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் ஒயின் சிறந்த அழகு பொருளாக சருமத்திற்கு இளமை தரும் பொருளாக கருதப்படுகிறது. திராட்சை விதையில் உயர்தர பாலிஃபினால் உள்ளது. ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் காணப்படுகிறது. இது சருமத்தில் பாதிக்கப்பட்ட செல்களை உயிர்ப்பிக்கிறது. இதில் வைட்டமின் சி, இ, ஏ (பீட்டா கரோட்டீன்) போன்றவை காணப்படுகின்றன. இது மூளையை சுறுசுறுப்பு ஆக்குவதோடு அனிச்சை செயலை உற்சாகப்படுத்துகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகப்பருக்கள் வராமல் தடுக்க கையாள வேண்டிய வழிமுறைகள்