Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி

கர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் செம்பருத்தி
செம்பருத்தி செடியின் பூக்கள் தலை முடி அழகுக்காக பல வழிகளில் பயன்படுகிறது. செம்பருத்திப் பூ அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.


 


இவற்றின் இலை, பூ, வேர் என அனைத்தும் மருத்துவத் தன்மையுள்ளவை.
 
கர்பப்பை பாதிப்பினால் கருவுறாமல் இருப்பவர்களுக்கும், வயது அதிகம் ஆகியும் ருதுவாகாமல் இருக்கும் பெண்களுக்கும் செம்பருத்திப்பூ சிறந்த மருந்து. செம்பருத்திப் பூவின் இதழ்களை அரைத்து மோரில் கலந்து தினமும் சாப்பிட்டு வந்தால் வெகுவிரைவில் கருப்பையில் உள்ள நோய்கள் குணமாகும். பூப்பெய்தாத பெண்களும் பூப்பெய்துவார்கள்.
 
மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் உபாதைகளைக் குறைக்கும். செம்பருத்திப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து கசாயமாகக் காய்ச்சி அருந்தி வந்தால், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் அடிவயிற்று வலி, தலையிடி, மயக்கம் போன்றவை குறையும்.
 
இருதய நோயாளிகள் செம்பருத்திப் பூ இதழ், வெள்ளைத் தாமரையின் இதழ் எடுத்து கஷாயம் செய்து பாலில் கலந்து அருந்தி வந்தால் இரத்தக் குழாயில் உள்ள அடைப்பு நீங்கி இருதய நோய் குணமாகும்.
 
அஜீரணக் கோளாறால் வயிற்றில் வாய்வுக்கள் சீற்றமடைந்து வயிற்றின் உட்புறச் சுவர்களைத் தாக்குகின்றன. இதனால் வாயிலும் புண்கள் உருவாகின்றன. இப்படி வயிற்றுப்புண், வாய்ப்புண்ணால் பாதிக்கப் பட்டவர்கள் தினசரி 5 அல்லது 10 பூக்களின் இதழ்களை சாப்பிட்டு வந்தால் புண்கள் குணமாகும்.
 
தலையில் பொடுகு, பேன், ஈறு தொல்லைகள் அதிகமாக இருக்கும். இவர்கள் எவ்வளவுதான் மருந்துகள், ஷாம்புகள் உபயோகித்துப் பார்த்தாலும் அவர்கள் முழுமையாக இந்த தொல்லையிலிருந்து விடுபடமுடிவதில்லை. 
 
இதற்கு அருமையான மருந்து செம்பருத்திதான். செம்பருத்தி பூவின் இதழ்களை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பேன், பொடுகு நீங்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உல‌ர் அன்னாசி பழமு‌ம் இர‌த்த உ‌ற்ப‌த்‌தியு‌ம்!