Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு குடிநீரை எவ்வாறு தயார் செய்வது...?

டெங்கு காய்ச்சலை விரட்டும் நிலவேம்பு குடிநீரை எவ்வாறு தயார் செய்வது...?
டெங்கு காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமின்றி, சாதாரண காய்ச்சல் வந்தவர்களும் நிலவேம்புக் கஷாயம் அருந்தலாம். சித்த  வைத்திய மருந்துக் கடைகளில் நிலவேம்பு கிடைக்கிறது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, ரத்த தட்டு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்கிறது.

 
நிலவேம்பு குடிநீர் எவ்வாறு தயார் செய்வது...
 
நிலவேம்பு, வெட்டி வேர், விளாமிச்சம் வேர், சந்தனக் கட்டை, பேய் புடல், கோரைக் கிழங்கு, சுக்கு, மிளகு, பப்படம் புல்  ஆகியவற்றைச் சமஅளவில் இடித்துப் பொடியாக்கிக்கொள்ள வேண்டும். இரண்டு டேபிள் ஸ்பூன் பொடியை அரை லிட்டர் நீரில்  போட்டுக் கொதிக்கவைத்து, கால் லிட்டராகச் சுண்டவைத்து அருந்த வேண்டும். கசப்புச் சுவை நீங்க, கஷாயம் குடித்த பின்,  பனங்கற்கண்டைச் சுவைக்கலாம்.
 
டெங்கு காய்ச்சலை தடுக்க:
 
டெங்கு காய்ச்சல் பாதிப்பைத் தவிர்க்க நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டும். ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை,  நார்த்தம்பழம், நெல்லி ஆகியவற்றைச் சாப்பிடலாம். மழைக் காலத்தில் சளி பிடிக்கும் என நினைத்தால், சர்க்கரைக்குப் பதிலாக  உப்பு போட்டுக் குடிக்கலாம்.
 
தினமும் உணவில் மிளகு, பூண்டு, மஞ்சள், சீரகம் போன்றவற்றைச் சேர்க்கலாம். நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய்  மூன்றும் சேர்ந்த திரிபலா சூரணப் பொடியை, ஒன்று அல்லது இரண்டு டீ ஸ்பூன் எடுத்து, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான  தண்ணீரில் கலந்து, தினமும் இரவில் படுக்கப்போகும் முன் அருந்துவது மிகவும் நல்லது.
 
சீந்தில் கொடியின் தண்டு, வில்வ இலை, துளசி,  மஞ்சள், நெல்லிக்காய், பளிங்கு சாம்பிராணி,  திப்பிலி ஆகிய மூலிகைகள்  நோய் எதிர்ப்புச் சக்தியை சீராக வைத்திருக்க உதவுகின்றன. இவற்றை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
 
கொய்யா, நெல்லிக்காய், கீரைகள், காய்ந்த திராட்சை, பேரீச்சை, அத்தி போன்றவற்றை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். முட்டை,  எண்ணெய்ப் பசை அதிகம் உள்ள மத்தி, சால்மன் போன்ற மீன்களைச் சாப்பிடலாம். இவை நோய் எதிர்ப்புச் சக்தியை  மேம்படுத்தும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முதலிரவில் மணப்பெண் கையில் பால் கொடுத்து அனுப்புவது ஏன் தெரியுமா?