Publish Date: Sun, 02 May 2021 (00:30 IST)
Updated Date: Sun, 02 May 2021 (00:34 IST)
பட்டை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் கீல்வாதம், மூட்டுவலி, தசைவலியை சரி செய்யும். அதுமட்டுமல்ல மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்.
வாயில் இருக்கும் பாக்டீரியாக்களால் பற்சிதைவு, பற்சொத்தை போன்ற பிரச்சனைகள் தோன்றுகின்றன. இலவங்கப்பட்டை வாயில் உள்ள பாக்டீரியாக்களை அகற்றுகிறது, இதனால்தான் பற்பொடி மற்றும் பற்பசைகளில் இலவங்கப்பட்டை பயன்படுத்தபடுகிறது.
இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்கும். டைப் 2 சர்க்கரை நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை சீராக வைத்திருக்க இலவங்கப் பட்டை உதவுகிறது. மேலும் உடலில் உள்ள இன்சுலின் போதுமான அளவு சுரக்க உதவுகிறது.
ஆன்டிஆக்சிடன்டுகள் ஆக்சிஜனேற்றத்தால் உடலுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க உதவுகிறது. இலவங்கப்பட்டையில் உள்ள பாலிஃபீனால்களின் ஆக்சிஜனேற்ற எதிர்ப்புப் பண்பில் இது பூண்டை விட அதிக செயல்திறன் கொண்டதாகத் திகழ்கிறது.
உடல் எடை குறைவதற்கு இலவங்கப்பட்டை உதவுகிறது. இலவங்கப்பட்டையில் சிறிதளவு நார்ச்சத்து உள்ளது, இது செரிமானத்திற்கும் உடலில் உள்ள நச்சுப்பொருள்களை வெளியேற்றவும் உதவுகிறது.
இலவங்க பட்டை நுரையீரலில் இருந்து சளியை அகற்றுவதால், பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு நுரையீரலில் ஏற்பட்ட இறுக்கம் மற்றும் அடைப்பை சரிசெய்ய உதவுகிறது.