Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

வெந்தயத்தில் உள்ள பயன்கள்

வெந்தயத்தில் உள்ள பயன்கள்
, சனி, 18 டிசம்பர் 2021 (23:20 IST)
வெந்தய விதைகளில் புரதம், சர்க்கரை, வைட்டமின், உலோகச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகியவை அடங்கியிருக்கின்றன. வெந்தய இலைகளிலும், தண்டுகளிலும் கால்சியம், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
 
வெந்தயம் மனித உடலுக்கு தேவையான ஒன்றாகும். அந்த வெந்தயம் இரும்பு சத்தை வெந்தயம் நமக்கு அளிக்கிறது. இதனால் மனித உடலை இரும்பு போல் ஆக்க கூடிய தன்மை வெந்தயத்திற்கு உள்ளது. அதே போல் வெந்தயத்தின் கீரையும் நமக்கு உணவாகவும், மருந்தாகவும் பயன்படுகிறது. 
 
வெந்தய கீரையை பகலில் சமைத்து சாப்பிட்டு வர வாய்வு தொல்லையிலிருந்து விடுபடலாம். வயிற்று உப்பிசம் இருந்தாலும் குறையும். 
 
வெந்தயம் மருந்தாக விளங்குகிறது. இது நார்ச்சத்தையும், சவ்வு தன்மையும் கொண்டிருப்பதால் இது வயிற்று கோளாறுகளுக்கு சிறந்த மருந்தாக விளங்குகிறது. மலச்சிக்கலை தடுத்து நிறுத்துகிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு வெந்தயம் ஒரு சிறந்த துணை உணவாக பயன்படுகிறது என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 
 
வெந்தயத்தை தினமும் கால் ஸ்பூன் எடுத்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்பு மற்றும் கால்சியம் சத்து கிடைக்கிறது. வெந்தய கீரையை பயன்படுத்தி இருமல், வயிற்று வலி, மூலம் போன்றவற்றை குணப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். 
 
ஜீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால், இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது. இதய நோய் இல்லாமல் போகிறது.
 
ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றையும் வெந்தயம் குறைக்கிறது. இதய நோய் உள்ளவர்கள் வலி ஏற்படும் போது இந்த கஷாயத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் வலி குறைகிறது. இவ்வாறு வெந்தயம் நமது உடலுக்கு பல்வேறு பலன்களை அளிக்கிறது.
 
பெண்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபட வெந்தயம் உதவுகிறது. இரவு உறங்க செல்லும் முன் வெந்தயத்தை ஊற வைத்துவிட்டு காலையில் அதை விழுதாக அரைத்து அரை மணி நேரம் தலையில் தடவி குளித்து பாருங்களேன், முடி உதிர்வது குறைவதோடு, அடர்த்தியாக வளரவும் செய்கிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிறுநீர் பாதையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு எளிய தீர்வு