Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இயல்பாக இருப்பதே உடலுறவிற்கு முக்கியம்!

Advertiesment
இயல்பாக இருப்பதே உடலுறவிற்கு முக்கியம்!
, செவ்வாய், 15 மார்ச் 2022 (00:29 IST)
மறக்க முடியாத உடலுறவுக்கு, கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் மட்டுமே போதுமானது. அதிக எதிர்பார்ப்பு ஆபத்திலேயே முடியும்.
 
உறவின்போது இயல்பு கூடுதலாக இருந்தால் இனிமையும் தானாகவே அதிகரிக்கும். மறக்க முடியாத உறவு வேண்டும் என்று நினைத்தால் முதலில் மனதை ‘ரிலாக்ஸ்’ ஆக்குங்கள். எப்போதும் ‘ஹார்ட்’ ஆக இருக்க வேண்டியதில்லை. ‘சாப்ட்’ ஆகவும் இருப்பது அவசியம். எப்படி சந்தோஷப்படுத்துகிறேன் பார் என்று கடும் வேகத்தில் முயற்சித்தால் அது கஷ்டத்தில் தான் கொண்டு போய் விடும்.
 
எனவே இயற்கையான வேகமே போதுமானது. சரியான சந்தர்ப்பம் கிடைக்கும்போது அதை சரியாக பயன்படுத்திக் கொள்பவர்தான் புத்திசாலி. செக்ஸ் விஷயத்தில் வேகமாக இருப்பதை விட விவேகமாக இருப்பதுதான் இயல்பான, இனிமையான செக்ஸ் உறவுக்கு சிறந்தது. இது பெண்களை விட ஆண்களுக்குத்தான் முக்கியமாக தேவை. ‘வெரைட்டி’யாக முயற்சிப்பதில் தவறில்லை. அதேசமயம், அது விரக்தியில் கொண்டு போய் விட்டு விடக் கூடாது என்பதும் முக்கியமானது.

கடுமையான முயற்சிகளை பெரும்பாலான பெண்கள் விரும்புவதில்லை. அமைதியான, ஆழமான, நீடித்த உறவைத்தான் பெரும்பாலான பெண்கள் விரும்புவார்கள். அதேபோல மனம் நிறைய கற்பனைகளை அடுக்கி வைத்துக் கொண்டு ‘உறவில்’ இறங்கக் கூடாது. அது எதிர்பாராத ஏமாற்றங்களுக்கு வழி விடலாம். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், களத்தில் இறங்கினால் எதிர்பாராத இன்பம் கிடைத்து மகிழ்ச்சியையும், கூடலையும் உறுதியாக்கி உற்சாகப்படுத்தும்.
 
அதேசமயம், படுக்கையில் போய் உட்கார்ந்து கொண்டு திட்டமிடுவதும் தவறு. கொஞ்சம் கற்பனை, கொஞ்சம் எதிர்பார்ப்பு, கொஞ்சம் உத்திகள் என சின்னச் சின்ன பிளானுடன் போனாலே போதுமானது. அதாவது அடிப்படை இருக்க வேண்டும். அபரிமிதமான திட்டமிடல்கள் இங்கு தேவையில்லை. உங்கள் மீது உங்களது பார்ட்னருக்கு ஆர்வம் கலந்த எதிர்பார்ப்பு இருக்க வேண்டுமே தவிர, ‘இன்னிக்கு என்ன பன்னப் போறானோ’ என்ற பீதி மட்டும் வந்து விடவே கூடாது.
 
அதேபோல ‘பொசிஷன்’ குறித்தும் ஏடாகுடமான எதிர்பார்ப்புகளுடன் போகக் கூடாது. உங்களுக்கு எது வசதியோ அதை மட்டுமே முயற்சித்தால் போதுமானது. அதனால் எந்த பாதிப்பும் நிச்சயம் வராது. அதில் அப்படி பார்த்தோமே, செய்து பார்த்தால் என்ன என்று முயற்சித்தால் சில நேரங்களில் ஏமாற்றமோ அல்லது கசப்பான அனுபவமோ ஏற்படக் கூடும். அதனால் முடிந்ததை செய்யுங்கள் - முக்கியமாக உங்களது பார்ட்னருக்கு பிடித்தமானதை மட்டும் செய்யுங்கள். இது மிகவும் சவுகரியமானது, பாதுகாப்பானதும் கூட.
 
செக்ஸ் என்பது கற்றுக்கொள்வதுதான். எல்லாம் தெரிந்தவர் எவரும் இல்லை. இன்னொரு முக்கியமான விஷயம். எதுவுமே முழுமையானதல்ல. முழுமையானது என்று இந்த உலகில் எதுவுமே கிடையாது. எனவே இன்று உறவு சரியில்லையே என்ற ஏமாற்றத்துடன் தூங்கப் போகாதீர்கள். நாளை இதை விட சிறந்த இரவாக அமையலாம்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நோய் நீக்கி உடல் தேற்றியாக அஸ்வகந்தா !!