Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் அழகு குறிப்புகள்...!

Webdunia
ஞாயிறு, 16 பிப்ரவரி 2020 (16:50 IST)
முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் அழகு குறிப்புகள்
எண்ணெய் பசை சருமம் என்றால், அவர்கள் தங்களின் சருமத்தில் உள்ள எண்ணெய்யை அவ்வப்போது நீக்காவிட்டால், முகத்தில் பருக்கள், கரும்புள்ளிகள், வெள்ளைப்புள்ளிகள் போன்ற பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
 
சருமத்திற்கு எபோதும் இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தும் போது, சருமத்தின் ஆரோக்கியம் மேம்படும்.
 
வெள்ளை வினிகரை நீரில் சரிசமமாக கலந்து காட்டனில் நனைத்து, முகத்தைத் துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி முகம் பொலிவோடு காணப்படும்.
 
சிறிது புதினா இலைகளை நீரில் போட்டு நன்கு கொதிக்கவிட்டு, அந்நீரை குளிர் வைத்து, பின் அதனை காட்டன் பயன்படுத்தி முகத்தைத் துடைத்து எடுக்கலாம். இதுவும் எண்ணெய் படையைக் கட்டுப்படுத்தும்.
 
கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ முகம் பளிச்சென்ற இருக்கும்.
 
வெள்ளரிக்காயை துருவி, அதில் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறவைத்து பின் குளிர்ந்த நீரில் கழுவ முகத்தில் உள்ள எண்ணெய் பசை மட்டுமின்றி அழுக்குகளும் முழுவதுமாக நீக்கப்படும்.
 
தக்காளி சாறு மற்றும் தேனை சரிசமமாக சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊறவைத்து கழுவ முகம் எண்ணெய் பசையின்றி  பளிச்சென்று இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்று உலக நீரிழிவு தினம்.. சர்க்கரையை கட்டுக்குள் வைப்பது எப்படி?

6 வயதிலேயே சில சிறுமிகள் பூப்படைவது ஏன்? டிவி, செல்போன் பார்ப்பதும் ஒரு காரணமா?

சர்க்கரை நோய் உள்ளவர்கள் எந்தெந்த வாழைப்பழங்களை சாப்பிடலாம்? சாப்பிடக்கூடாது?

கழுத்தை சுற்றி ஏற்படும் கரும்படலம்.. என்ன காரணம்?

சர்க்கரை வியாதியால் பெண்களுக்கு பாலியல் பிரச்சினைகள் ஏற்படுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments