நாம் உண்ணும் உணவு நல்லதாகவும், சத்துள்ளதாக இருக்கவேண்டும்.
அவரைக்காய் கெட்ட கொழுப்பு குறைத்து, ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, நரம்புகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இரும்புச்சத்து, ஆண்டிஆக்சிடண்ட் நிறைந்துள்ளதால், ரத்தசோகை குணமாகும்.
அவரைக்காயில் உள்ள இரும்புச் சத்து, நம் உடல் சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி செய்ய மிகவும் இன்றியமையாததாக உள்ளது.
வைட்டமின்கள் ஏ மற்றும் சி, நீர்ச்சத்து, புரதம் நிறைந்துள்ளது.
அவரைக்காயில் பொட்டாசியம், எலெக்ட்ரோலைட்டுகளின் உதவியுடன் நம் உடலில் உள்ளா நீர் மற்றும் அமிலங்களின் அளவுகளை சீராக வைத்துக்க உதவுகிறாது.
நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
கர்ப்பக் காலத்தின் ஆராம்பத்தில் சாப்பிட்டால், குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாகும்.
நம் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியச் சத்தும் அவரைக்காயில் கணிசமான அளவில் உள்ளது.