Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தலை முடியின் வளர்ச்சி உதவும் கற்றாழை எண்ணெய்...!!

Webdunia
வெள்ளி, 24 டிசம்பர் 2021 (01:06 IST)
கற்றாழை பெண்களின் தலை முடியின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க, கற்றாழையில் எண்ணெய் தயாரித்து உபயோகப்படுத்தலாம். கற்றாழை மிகவும் அற்புதமான மூலிகைப் பொருள். இதில் ஏராளமான மருத்துவ  குணங்கள் நிறைந்துள்ளன.
 
இது உடல் ஆரோக்கியம் முதல் சருமம், தலைமுடி போன்றவற்றின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்த வல்லது. தலைமுடி அதிகம் உதிரும் பிரச்சனை உள்ளவர்கள், கற்றாழை ஜெல்லைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்தால், தலைமுடி உதிர்வது நின்றுவிடும்.
 
கற்றாழையை கொண்டு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம். ஆனால் கற்றாழை எண்ணெய் தயாரித்து வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், மூன்றே மாதங்களில் தலைமுடி நன்கு வளர்ந்திருப்பதைக் காணலாம்.
 
தேவையான பொருட்கள்: கற்றாழை இலை, தேங்காய் எண்ணெய் 50 மிலி. செய்முறை: முதலில் கற்றாழை இலையில் உள்ள ஜெல்லை  தனியாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
 
செய்முறை: கற்றாழை ஜெல் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து, 2 நாட்கள் ஊற வைக்க வேண்டும். பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, குறைவான தீயில் 10 நிமிடம் நன்கு கிளறி விட்டு சூடேற்றி, ஒரு  பதத்திற்கு வந்ததும் இறக்கி குளிர வைத்து, வடிகட்டினால், கற்றாழை எண்ணெய் தயார்.
 
பயன்படுத்தும் முறை: கற்றாழை எண்ணெயை இரவில் படுக்கும் முன் தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி மசாஜ் செய்து, இரவு  முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி செய்வதால், மயிர்கால்கள் ஊட்டம் பெற்று  வலிமையடைந்து, அதன் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அதிகளவு எண்ணெய் பலகாரங்கள் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனைகள்..!

குழந்தைகளுக்கு பிஸ்கட் சாப்பிட கொடுப்பது நல்லதா?

சுண்டல் அவித்து சாப்பிடுவதால் கிடைக்கும் வைட்டமின்கள்.. ஆரோக்கியமான ஸ்னாக்ஸ்..!

பலாப்பழத்தில் உள்ள வைட்டமின் என்னென்ன?

பாகற்காய் ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments