Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மீனாட்சி அம்மன் வழிபாட்டு பலன்கள் !!

மீனாட்சி அம்மன் வழிபாட்டு பலன்கள் !!
, புதன், 23 பிப்ரவரி 2022 (18:09 IST)
மீனாட்சி அம்மன் நவகிரகங்களில் புதன் கிரகத்தின் அம்சம் கொண்டவராக இருக்கிறார்.


ஜாதகத்தில் புதன் கிரக தோஷங்கள் இருப்பவர்கள் மீனாட்சி அம்மனுக்குரிய காயத்ரி மந்திரங்களை ஜெபித்து, வழிபாடு செய்வதால் தோஷங்கள் நீங்கி, நன்மைகள் உண்டாகும். வறுமை நிலை நீங்கி செல்வங்கள் பெருகும்.

தொழில், வியாபாரங்களில் நஷ்டங்கள் ஏற்படாமல் நல்ல வருமானமும் உண்டாகும். கல்வி, கலைகளில் சிறந்து விளங்க முடியும். திருமணமாகாத ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த வாழ்க்கைத்துணை அமையப் பெறுவார்கள்.

மங்களங்கள் வழங்கும் தேவியான மீனாட்சியை அனைத்து தினங்களிலும் வழிபடலாம் என்றாலும் வாரத்தில் வருகின்ற புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் வழிபடுவது மிகவும் சிறப்பானதாகும்.

சித்திரை மாதத்தில் வருகின்ற சித்ரா பௌர்ணமி தினத்தில் மீனாட்சி அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் அர்ச்சனை செய்து வழிபடுவது வாழ்வில் நன்மைகள் அதிகம் ஏற்பட செய்யும் ஒரு சிறந்த வழிபாடாக இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காரிய தடைகளை நீக்கும் விநாயக பெருமான் வழிபாடு !!