Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நடிகர் விஷாலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் எடுக்கக்கூடாது- உயர் நீதிமன்றம்

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (14:03 IST)
நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நடிகர் விஷாலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் எடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.
 
பிரபல முன்னணி தயாரிப்பு நிறுவவம் லைகா. இந்த  நிறுவனத்திற்கு விஷால்  தர வேண்டிய ரூ.21.29 கோடியில் ரூ.15 கோடியை  நீதிமன்றத்திற்குச் செலுத்த வேண்டுமென உத்தரவிடப்பட்டிருந்த நிலையில்,  நடிகர் விஷால் இதுவரை செலுத்தாத காரணத்தால் சமீபத்தில், அவரது மார்க் ஆண்டனி படத்தை வெளியிட சென்னை நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது.

இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் விஷால் தரப்பு மேல்முறையீடு செய்தனர். இதில் விஷாலின் வங்கி கணக்கு விவரங்களை சமர்பிக்க கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம் “மார்க் ஆண்டனி” படத்தின் மீதான தடையை நீக்கி உத்தரவிட்டது.

ஆனால் வங்கி கணக்கு விவரங்கள் முரணாக இருந்தால் எதிர்காலத்தில் படம் நடிக்க முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் விஷாலை எச்சரிக்கை செய்ததாக தகவல் வெளியானது.

இதையடுத்து, நடிகர் விஷால் வரும் 22 ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ஆவணங்கள் தாக்கல் செய்யாததால் விஷால் ஆஜராக வேண்டும் எனவும், ரூ. 15 கோடி செலுத்த  நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என  தனி நீதிபதி, விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தார்.

இந்த  நிலையில் இன்று, நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத நடிகர் விஷாலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஏன் எடுக்கக்கூடாது என்று உயர் நீதிமன்றம்  கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும், நீதிமன்றத்தில் அனைவருமமெப்படி கருதப்படுகிறறார்களோ அப்படித்தான் நடிகர் விஷாலும் கருதப்படுவார். நீதிமன்றத்தை விட தான் பெரியவன் என நினைத்துக் கொள்ள வேண்டாம் என  லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் விஷாலுக்கு  நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

12 வருஷம் காத்திருப்பு.. அல்டிமேட் நகைச்சுவை கியாரண்டி! - விஷால் மகிழ்ச்சி பதிவு!

திருமணத்தை வெறுக்கும் பிரபாஸ்! அதுக்கு காரணம் இதுதான்..? - மனம் திறந்த தாயார்!

நீண்ட கால நண்பனை கரம்பிடித்த சாக்‌ஷி அகர்வால்! கோவாவில் நடந்த திருமணம்! - வைரல் போட்டோஸ்!

ரசிகை பலியான வழக்கு: நடிகர் அல்லு அர்ஜுனுக்கு கிடைத்த ஜாமீன்..!

விடாமுயற்சி தாமதம் ஏன்? பொங்கலுக்கு 10 படங்கள் வெளியாவது தமிழ் சினிமாவுக்கு நல்லதா?

அடுத்த கட்டுரையில்
Show comments