Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ் - ஏமாற்றமளித்த ஆக்ஷன் தாத்தாக்கள்

யுஎஸ் பாக்ஸ் ஆஃபிஸ் - ஏமாற்றமளித்த ஆக்ஷன் தாத்தாக்கள்
, திங்கள், 18 ஆகஸ்ட் 2014 (20:09 IST)
5. The Giver
சென்ற வாரம் வெளியான இந்த ஆக்ஷன் சயின்ஸ் ஃபிக்ஷன் விமர்சகர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது. முதல் மூன்று தினங்களில் இதன் வசூல் 12.8 மில்லியன் டாலர்கள். படத்தின் பட்ஜெட் 25 மில்லியன் டாலர்கள் என்பதால் லாபம் நிச்சயம்.
4. The Expendables 3 
சில்வஸ்டர் ஸ்டாலோன், அர்னால்ட், ஹாரிசன் ஃபோர்ட், மெல்கிப்சன், வெஸ்லி ஸ்னைப்ஸ், ஜாசன் ஸ்டெதம் என ஹாலிவுட்டின் பெரிய தலைகள் இணைந்தும் வசூல் என்னவோ குறைவுதான். இந்த ஆக்ஷன் தாத்தாக்கள் முதல் மூன்று தினங்களில் 16.2 மில்லியன் டாலர்களையே வசூலித்துள்ளனர்.
 

3. Let's Be Cops
த அனிமல் போன்ற சுவாரஸியமான காமெடிப் படங்களை தந்த லூக் க்ரீன்ஃபீல்டின் மற்றுமொரு படம். இதுவும் சென்ற வாரமே வெளியானது. வார இறுதியில் வசூல் 17.7 மில்லியன் டாலர்கள்.
 
2. Guardians of the Galaxy  
இன்னும் வலிமையான இடத்தில் இந்த சூப்பர்ஹீரோ படம் உள்ளது. சென்ற வார இறுதியில் 24.7 மில்லியன் டாலர்களை வசூலித்த இப்படம் இதுவரை யுஎஸ்ஸில் மட்டும் 222.3 மில்லியன் டாலர்களை தனதாக்கியுள்ளது.
webdunia
1. Teenage Mutant Ninja Turtles
சென்ற வாரத்தின் அதே முதலிடத்தில். 125 மில்லியன் டாலர்கள் பட்ஜெட்டில் தயாரான இப்படம் ஞாயிறு வரை யுஎஸ்ஸில் மட்டும் 117.6 மில்லியன் டாலர்களை வசூலித்துள்ளது. சென்ற வார இறுதியில் வசூல் 28.4 மில்லியன் டாலர்கள்.

Share this Story:

Follow Webdunia tamil