Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நாளை எந்திரங்களின் அட்டகாசத்துக்கு தயாராகுங்கள்

Advertiesment
ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ்
, வியாழன், 26 ஜூன் 2014 (13:19 IST)
உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களை ஒருசில படங்கள்தான் ஈர்க்கும். அந்தப் படங்களின் சீக்வெலுக்காக அவர்கள் காத்திருப்பார்கள். படம் வெளியானதும் திரையரங்குகள் கூட்டத்தால் அம்மும்.
 
அப்படியொரு சீரிஸ்தான் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் (Transformers).
2007இல் மைக்கேல் பே (Michael Bay) இயக்கத்தில் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் வெளியானது. வேற்று கிரகவாசிகளை அவலட்சணமான மனித உருவங்களாகவும், வினோத மிருகங்களாகவும், எந்திர மனிதர்களாகவும் பார்த்து வந்த கண்களுக்கு ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் வித்தியாசமான அனுபவமாக அமைந்தது. சீறிப் பாய்ந்து வரும் கார்களும், ட்ரக்குகளும் கணப்பொழுதில் பிரமாண்டமான எந்திர மனிதனாக மாறுவது உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களை கவர்ந்தது. படம் ஹிட்.
 

மைக்கேல் பே வேறு கமர்ஷியல் படங்களை இயக்குவதை நிறுத்திக் கொண்டார். 2009இல் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸின் இரண்டாவது படம் ரிவெஞ்ச் ஆஃப் த ஃபாலன் (Transformers: Revenge of the Fallen)  வெளியானது. அந்தப் படத்தையும் ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக் கொண்டனர். அடுத்து 2011இல் ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் - டார்க் ஆஃப் த மூன் (Transformers: Dark of the Moon).
webdunia
2007இல் முதல் படம் வெளியானதிலிருந்து நாளை அதன் நான்காம் பாகம் Transformers: Age of Extinction  வெளியாவது வரை ட்ரான்ஸ்ஃபார்மர்ஸ் சீரிஸ் தவிர்த்து பெய்ன் அண்ட் கெய்ன் (Pain & Gain) என்ற ஒரேயொரு படத்தை மட்டுமே மைக்கேல் பே இயக்கினார். இதில் நடித்த மார்க் வால்பெர்க் (Mark Wahlberg)  நாளை வெளியாகும் நான்காம் பாகத்திலும் ஹீரோவாக நடித்துள்ளார்.
 
165 மில்லியன் டாலர்கள் செலவில் நான்காவது பாகம் தயாராகியிருக்கிறது. முந்தைய பாகங்களைவிட பிரமாண்டமான எந்திரங்கள் இந்தப் பாகத்தில் வருகின்றன. நாளை யுஎஸ்ஸில் வெளியாகும் அதேநாள் இந்தியாவிலும் படம் வெளியாகிறது.
 
ஆக்ஷன் பட ப்ரியர்கள் தவிர்க்க முடியாத படம் இது.

Share this Story:

Follow Webdunia tamil