Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த நாலு பேருக்கு நன்றி: உருகிய ஜெயம்ரவி

Advertiesment
அந்த நாலு பேருக்கு நன்றி: உருகிய ஜெயம்ரவி
, வியாழன், 27 டிசம்பர் 2018 (11:10 IST)
தனி பாதையில் கடும் முயற்சிகளை முதலீடாக இயங்கி கோலிவுட்டில் தனக்கென முத்திரை பதித்தவர் ஜெயம் ரவி.



இவரது நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள அடங்கமறு திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன் வசூலிலும் டாப் வரிசையில் உள்ளது. இதேபோல் இந்த ஆண்டு வெளியான சிறந்த படங்களில் அடங்க மறு படமும் ஒன்றாக கருதப்படுகிறது.  இந்த ஆண்டு முன்பாதியில் வெளியான டிக்டிக்டிக் படமும் நல்ல வரவேற்பை பெற்றது.
 
இந்நிலையில் ஜெயம்ரவி தனியார் இணைதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் , நேமிசந்த் ஜபக் சார் மற்றும் சுஜாதா விஜயகுமார் அத்தை போன்ற தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் அடங்கமறு மற்றும் டிக்டிக்டிக் படங்கள் உருவாகி இருக்காது.  என்னை நம்பிய இயக்குனர்கள் சக்தி சௌந்தர்ராஜன் (டிக் டிக் டிக்) மற்றும் கார்த்திக் தங்கவேல் (அடங்க மறு) ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். எந்த ஒரு சூப்பர்ஸ்டாரும் இந்த படங்களை இழக்க விரும்ப மாட்டார்கள். வெறுமனே வெற்றி கொடுக்கும் உற்சாகத்தை விட, என் அடுத்த திரைப்படங்களை கவனமாக தேர்வு செய்வேன் என்கிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

குருவுக்கு சிஷ்யன் சிவகார்த்தியேன் செய்த மரியாதை