உலக இளைஞர்களை பைத்தியமாக்கிய ‘லவ்வர்’ – டெய்லர் ஸ்விஃப்டுக்கு விருது!

செவ்வாய், 3 மார்ச் 2020 (13:24 IST)
உலக அளவில் அதிகமாக விற்பனையான மற்றும் ரசிகர்களிடையே ஹிட் ஆன ஆல்பம் மற்றும் பாடகர்களுக்கு ஐ.எஃப்.பி.ஐ என்ற அமைப்பு விருது வழங்கி வருகிறது.

ஆண்டுதோறும் வழங்கப்படும் இந்த விருதுகளில் பாடகரின் இசை தொகுப்பு வெளியான காலம்தொட்டு ஒரு ஆண்டிற்குள் அதன் விற்பனை நிலவரம் மற்றும் ஆன்லைன் இசை தளங்கள், யூட்யூப் போன்றவற்றின் மூலம் அந்த பாடல்கள் எவ்வளவு முறை கேட்கப்பட்டது போன்றவற்றை கணித்து இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

2019ம் ஆண்டில் அதிகமாக விற்பனையான இசைத்தொகுப்பாக பிரபல பாடகி டெய்லர் ஸ்விஃப்டின் ‘லவ்வர்’ தேர்வாகியுள்ளது. காதலை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த இசைத்தொகுப்பின் ஒரு பாடலான “லவ்வர்” என்ற பாடலை யூட்யூபில் 6 மாதத்திற்குள் 110 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கிறார்கள். மேலும் இசைத் தட்டுகளாகவும், ஆன்லைன் மூலமாகவும் இந்த பாடல் கடந்த ஆண்டில் மற்ற பாடல்களை விடவும் அதிகமாக விற்பனையாகியுள்ளது. மேலும் இந்த விருதை டெலர் ஸ்விஃப்ட் இரண்டாவது முறையாக பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் யோவ் ம**று எவன் யாரு சிலையை திறந்தா எங்களுக்கு என்ன - ஜிப்ஸி சென்சார் தடை காட்சி!