Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மீண்டும் வருகிறான் ராம்போ – ரசிகர்கள் கொண்டாட்டம்

Webdunia
வெள்ளி, 31 மே 2019 (13:23 IST)
37 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ராம்போ கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் சில்வஸ்டர் ஸ்டாலோன். ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்திற்குள்ளாக 10 மில்லியன் ரசிகர்கள் இந்த அதை பார்த்து ஷேர் செய்து வருகின்றனர்.

1982-ல் வெளியான ஹாலிவுட் திரைப்படம் ‘First Blood’. ராம்போ என்று அழைக்கப்படும் இந்த படத்தை கதை எழுதி, தயாரித்து, நடித்தும் இருந்தார் சில்வஸ்டர் ஸ்டாலோன். இது சில்வஸ்டர் நடித்த முதல் படம் என்றாலும் ஹாலிவுட்டில் சக்கைபோடு போட்டது. ஹாலிவுட்டுக்கு பிறகு அதிகம் ஓடியது தமிழ்நாட்டில்தான். இந்த படத்திற்கு பிறகு சில்வஸ்டருக்கு வெறித்தனமான தமிழ் ரசிகர்கள் உருவானார்கள்.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்கள் வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் ஹிட் அடித்தன, சில்வஸ்டர் புழின் உச்சிக்கு போனார். இதன் நான்காவது பாகமான ‘ராம்போ-4’ 2008ல் வெளியானது. இதை சில்வஸ்டர் ஸ்டாலோனே இயக்கியிருந்தார். படம் வெற்றியடைந்தாலும், ‘Expendables’ போன்ற படங்களில் நடிக்க தொடங்கிவீட்டதால் அத்தோடு ராம்போ பாகங்கள் முடிவடைந்தன. தற்போது சில்வஸ்டருக்கு 72 வயதாகிறது. இந்நிலையில் இப்போது ராம்போவின் 5வது பாகம் ரிலீஸ் ஆகும் செய்தி ரசிகர்களை திக்குமுக்காட செய்திருக்கிறது. பழைய பாகங்களின் தொடர்ச்சியாக இந்த படம் வர இருக்கிறது. இதற்கு “Last Blood” என பயர் வைத்துள்ளார்கள். ராம்போவின் பழைய தீம் மியூசிக்கே இதிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 20ல் வெளியாகவிருக்கும் ராம்போ 5 க்கு இப்போதே எதிர்பார்ப்புகள் எகிற தொடங்கிவிட்டன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

நடிகர் அல்லு அர்ஜூனனுக்கு 14 நாட்கள் சிறை.. நீதிபதி அதிரடி உத்தரவு..!

ரசிகரை கொன்ற வழக்கில் தர்ஷனுக்கு ஜாமீன்! ரசிகர்கள் கொண்டாட்டம்!

ஆண்ட்ரியாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஆல்பம்!

பேச்சிலர் புகழ் திவ்யபாரதியின் க்யூட் போட்டோஷூட்!

அல்லு அர்ஜுனின் கைதுக்குப் பின்னால் அரசியல் காரணமா?

அடுத்த கட்டுரையில்
Show comments