Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எத்தனை ஸ்பைடர்மேன்யா வருவீங்க..? – ஸ்பைடர்வெர்ஸ் 2 தமிழ் ட்ரெய்லர்!

Advertiesment
Spiderman
, புதன், 5 ஏப்ரல் 2023 (13:20 IST)
பிரபல சூப்பர்ஹீரோவான ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்தை கொண்டு சோனி நிறுவனம் தயாரித்துள்ள ஸ்பைடர்மேன்: அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ் படத்தின் தமிழ் ட்ரெய்லர் வெளியாகி வைரலாகியுள்ளது.

உலகம் முழுவதும் பிரபலமாக உள்ள சூப்பர்ஹீரோக்களில் ஒருவர் ஸ்பைடர்மேன். ஸ்பைடர்மேன் கதாப்பாத்திரத்தை கொண்டு ஏராளமான படங்கள், கார்ட்டூன் தொடர்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளன. கடந்த ஆண்டு மார்வெல் வெளியிட்ட ஸ்பைடர்மேன் நோ வே ஹோம் படத்தில் 3 ஸ்பைடர்மேன்கள் தோன்றி படத்தை பெரும் ஹிட் அடிக்க வைத்தனர்.

இந்நிலையில் தற்போது மேலும் பல ஸ்பைடர்மேன்களை அறிமுகம் செய்யும் வகையில் வெளியாக உள்ளது சோனி தயாரிப்பில் ‘ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ்’. இந்த படம் இதற்கு முன்னர் சோனி வெளியிட்ட ‘ஸ்பைடர்மேன் இன் டூ தி ஸ்பைடர்வெர்ஸ்’ படத்தின் இரண்டாவது பாகமாகும். இந்த படங்களில் வழக்கமான பீட்டர் பார்க்கர் ஸ்பைடர்மேனுக்கு பதிலாக மைல்ஸ் மோரல்ஸ் ஸ்பைடர்மேன் பிரதான ஹீரோ பாத்திரமாக உள்ளார்.

இந்த புதிய அனிமேட்டன் ஸ்பைடர்மேன் அக்ராஸ் தி ஸ்பைடர்வெர்ஸ் படத்தின் தமிழ் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. மைல்ஸ் மோரல்ஸ், க்வென் ஸ்பைடர் வுமன், பிக்கி ஸ்பைடர் உள்ளிட்ட மல்டிவெர்ஸை சேர்ந்த ஏராளமான ஸ்பைடர்மேன்கள் இதில் வருகின்றனர். ஸ்பைடர்மேன் 2099 எனப்படும் மிகுவல் ஓ ஹாரா இதில் வில்லனாக இருப்பதாக ட்ரெய்லரை பார்க்கையில் அறிய முடிகிறது. ஏராளமான ஸ்பைடர்மேன்கள் மற்றும் கண்ணை கவரும் ஆக்‌ஷன் காட்சிகளுடன் தயாராகியுள்ள இந்த படம் ஜூன் 2ம் தேதி தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாக உள்ளது.

ட்ரெய்லரை காண
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரஜினியின் லால் சலாம் படத்துக்கு கதை எழுதியது இவரா?... சுவாரஸ்ய தகவல்!